சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் கொரோனா வைரசுக்கு அதிக மக்கள் பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் மொத்தம் 7375 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் இதுவரை 3119 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 80700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசுக்கு இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இத்தாலியில் நேற்று வரை 366 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 1492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவமனையில் மொத்தம் 7375 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு வெளியே முதலில் தென் கொரியாவில் கொரோனா பரவியது. அங்கு இதுவரை 51 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். மொத்தம் 7313 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.