ஒட்டு மொத்தத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உருவான ‘கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 17 பேர் ‘கொரோனா’வில் பலியாகி உள்ளனர். 299 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனா’ பாதிப்பு குறைவே என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, “ஒட்டு மொத்தத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் ‘கொரோனா’ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே” என்றார்.
Eelamurasu Australia Online News Portal