Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழர்களின் பிரச்சினை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது!-தர்மலிங்கம் சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சனை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது. எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல  சம உரிமை என்ற விடயத்தை தெளிவுபடுத்த முடியாத முள்ளந்தண்டற்ற எங்களுடைய தமிழ் தலைவர்கள் இருப்பதுதான் வேதனையானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு  இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்   தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதியோர்களின் நல திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் சிரேஷ்ட பிரஜைகள் சபை முதியோருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று ...

Read More »

ஆஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன்!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுவனின் ஆசையை பூர்த்தி யெய்யும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துருதுருவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்தபோது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரேஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் ...

Read More »

தலாய்லாமாவை துப்பாக்கியுடன் நெருங்கிய பாதுகாவலர்!

மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்குள்ள மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமா மேடையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்போது ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ...

Read More »

விராட்கோலியை வீழ்த்த எங்களிடம் திட்டம் இருக்கிறது – ஹேசில்வுட்

விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஹேசில்வுட் கூறினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹேசில்வுட் அடிலெய்டில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய அணியின் பேட்டிங் வரிசை உலகின் சிறந்த பேட்டிங் வரிசையாக உள்ளதாக நான் பார்க்கிறேன். விராட்கோலி மற்ற அணிகளுக்கு எதிராக எப்படி ரன்கள் திரட்டுகிறார் என்பதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். எனவே அவரது ஆட்டத்தை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். கடைசியாக ...

Read More »

7 பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணை!

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதனை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட  எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு  முன்னிலையில் இன்று முதல் விசாரணைகள் காலை ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூரண நீதியரசர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான இடையீட்டு மனுதாரர்கள் முன்வைத்த நகர்த்தல் பத்திரம் ...

Read More »

என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள்

“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்துறை சேவையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சரின் வவுனியா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அரசுக் கட்சியினரால் தமிழ் ...

Read More »

பிரான்ஸில் பதற்ற நிலை!

பிரான்ஸில் பல இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   முகமூடி அணிந்த குழுவொன்று பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை கருத்திற் கொண்டே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாரீஸ் நகரில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு, கலவர சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Read More »

மன்னார் மனிதப் புதைகுழியில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (3) 109 ஆவது நாளாக -மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வருகின்றது. இந்தநிலையில் தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் ...

Read More »

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம்!

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா இந்த விடயத்தை நேற்று அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை விடுக்கும் உலகின் முதல் நாடு என்ற பெயரையும் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்தச் சட்டம், அவுஸ்திரேலியர்களை “தன்னார்வலர்” திட்டங்களில் பங்கு கொள்வதை தடுப்பதற்கான ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது குழந்தைகளுக்கு உதவுவதற்கு மாறாக தீங்கு விளைவிப்பதே அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் 80 சதவீத குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என எவரோ ...

Read More »

ரணிலுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்! – மைத்திரிபால சிறிசேன

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளிற்கு டிசம்பர் 31 ம் திகதிக்குள்  தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி என சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலோன் டுடேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் பொதுத்தேர்தலிற்கு செல்வதே உரிய தீர்வாக அமையமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் இடம்பெற்றால் மக்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றவைகள் மீள இடம்பெறாத நிலையை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள சிறிசேன மக்கள் தங்கள் வாக்களி;ப்பின் மூலம் ஊழல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்ய ...

Read More »