Tag Archives: ஆசிரியர்தெரிவு

தடையை மீறி யாழ் பல்கலையில் எழுச்சியுடன் நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த தடையை மீறி சற்றுமுன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த தடையை மீறிச் சற்றுமுன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர்கள் எழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முன்னெடுத்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் மாணவர்கள் உள்நுழைவதற்கும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியால் நேற்று (26) தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து ...

Read More »

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தாயகம் தயார் நிலையில்!

மாவீரர் நினைவு வாரம் ஆரம்­பித்­துள்ள நிலையில் வடக்கில் உணர்­வு­பூர்­வ­மாக அதனை அனுஷ்­டிப்­ப­தற்­காக மாவீரர் துயி லும் இல்­லங்கள் தயா­ரா­கி­யுள்­ளன.   2009 ஆம் யுத்தம்  மௌனிக்­கப்­பட்ட பின்னரும் கூட வடக்கு கிழக்கு மக்­க­ளினால் மாவீரர் தினம் உணர்­வு­பூர்­வ­மாக அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அந்த வகையில் வடக்­கி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லங்­களில் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு  பொதுச்­சுடர் ஏற்றி மாவீ­ரர்­களை நினை­வு­கூர மக்கள் தயா­ரா­கி­வ­ரு­கின்­றனர். மாவீ­ரர்நாள் நினை­வேந்தல் குழு­வினர், பொது மக்கள் மற்றும் அர­சியல் கட்­சி­யினர்  ...

Read More »

எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இராணுவம் தயார்!- சவேந்திரசில்வா

சிறிலங்கா  இராணுவம் எந்தஎதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ளது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் மரபுசாரத ஆபத்துக்களையும் ஏனைய ஆபத்துக்களையும்  இனம் கண்டுள்ளது இதன் காரணமாக தயார் நிலையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர்  இராணுவம் தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிற்கும் நல்லிணக்க நடவடிக்கைகளிற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு ஏற்ப இந்த நடவடிக்கைகளை  படையினரின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் அனைத்து ...

Read More »

புலம்பெயர்ந்த பெண்! இன்று அவுஸ்திரேலியாவில் முக்கிய பிரபலம்!

அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதன்மை செயல் அலுவலர் ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து 200 டொலர்களுடன் புலம்பெயர்ந்த ஒரு இளம்பெண் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், Macquarie குழுமத்தின் முதன்மை செயல் அலுவலரான Shemara Wikramanayake (57), அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதல் பெண் முதன்மை செயல் அலுவலர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அவர் 2018/19 நிதியாண்டில் 18 மில்லியன் டொலர்கள் ஊதியம் பெற்றுள்ளார். வசதியாக வாழ்ந்த சூழலில், ஒரு நாள் 200 டொலர்களுடன் நாட்டை விட்டு புறப்பட ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தாயின் கவனக்குறைவால் இரண்டு குழந்தைகள் பலி!

அவுஸ்திரேலியாவில் தாயின் கவனக்குறைவால் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக கார் வெப்பத்திற்கு பலியாகியுள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kerri-Ann Conley (27) என்கிற தாய், நேற்றைய தினம் தன்னுடைய இரண்டு குழந்தைகளான டார்சி கான்லி (2) மற்றும் சோலி-ஆன்(1) ஆகியோரை 31 செல்சியஸ் வெப்ப நிலையில் காரில் மறந்துவிட்டு வீட்டிற்கு சென்று உறங்கிவிட்டார். நீண்ட நேர உறக்கத்திற்கு பின்னரே இரண்டு குழந்தைகளும் காரில் இருப்பது Conley-ன் நினைவுக்கு வந்துள்ளது. வேகமாக காருக்கு சென்ற அவர், இரண்டு குழந்தைகளும் சுயநினைவிழந்து கிடப்பதை பார்த்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். ...

Read More »

இலங்கை தமிழர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும்!

இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது… “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதை கண்டிக்காமல், விடுதலைப் புலிகளால் சோனியாகாந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு ...

Read More »

ஷானி அபேசேகர தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார்! – கோத்தாபய

குற்றவியல் விசாரணை திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தன்னிச்சையாக புலனாய்வு அதிகாரிகளையும் கடற்படையின் கட்டளை அதிகாரிகளையும் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளார் என்று  சிறிலங்கா  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பெல்லன்வில தர்மரத்ன தேரருடனான சந்திப்பின் போதே சிறிலங்கா ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஷானி அபேசேகர அதிகாரிகளை கைது செய்து துன்புறுத்தி தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளார். ஷானி அபேசேகர இவ்வாறான கைதுகளை மேற்கொள்ளும் போது அரச சாரா நிறுவனங்கள் அவரை மனித உரிமைகள் காப்பாளராக பாராட்டியதுடன் ...

Read More »

பத­விக்கு யாரை முன்­மொ­ழி­வது ?

எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு யாரை முன்­மொ­ழி­வது என்­பது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் தொடர்ந்தும் இழு­ப­றி­யான நிலைமை நீடிக்­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ அணி­யி­ன­ரி­டையே கடு­மை­யான போட்டி நிலவி வருகின்றது. முன்­ன­தாக கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெயரை எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு முன்­மொ­ழிந்து கடிதம் அனுப்­பி­யுள்ள நிலையில் 45 உறுப்­பி­னர்கள் கையொப்­பத்­துடன் சஜித் பிரே­ம­தா­ஸவின் பெயரை அப்­ப­த­விக்கு முன்­மொ­ழிந்து கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தனர். பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­யொன்றில் அதன் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அச்சமூட்டும் சம்பவம்!

சிட்னியின் உணவுவிடுதியொன்றில்  முஸ்லீம் கர்ப்பிணிப்பெண்ணை இனரீதியில் நபர்ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 38 வார கர்ப்பிணியான 31 ரசா எலஸ்மெர் என்ற முஸ்லீம பெண் பரமெட்டா கபேயில் தனது நண்பிகளுடன் காணப்பட்டவேளை 43 வயது நபர் ஒருவர்அவரை தாக்கினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ருசாஎலெஸ்மருடனும்  அவரது நண்பிகளுடனும் உரையாடிய பின்னர் அந்த நபர் தாக்குதலில் ஈடுபடுவதை சிசிரிவி காட்சிகள் காண்பித்துள்ளன. அந்த நபர் எலஸ்மெரின் முகத்தில் ஓங்கிகுத்துவதையும் அவர் நிலை தடுமாறி கீழே விழுவதையும் அதன் பின்னர்அந்த நபர் காலால் ...

Read More »

நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் இம்ரான்கான் சந்தேகம்!

லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்ற நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் பிரதமர் இம்ரான்கான் சந்தேகம் எழுப்பி உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 70). இவர் ஊழல் வழக்கில் 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின. உடல்நிலையைக் காரணம் காட்டி அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. வீட்டில் இருந்து அவர் சிகிச்சை பெற்ற நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், அவர் லண்டனில் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் ...

Read More »