அவுஸ்திரேலியாவில் அச்சமூட்டும் சம்பவம்!

சிட்னியின் உணவுவிடுதியொன்றில்  முஸ்லீம் கர்ப்பிணிப்பெண்ணை இனரீதியில் நபர்ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

38 வார கர்ப்பிணியான 31 ரசா எலஸ்மெர் என்ற முஸ்லீம பெண் பரமெட்டா கபேயில் தனது நண்பிகளுடன் காணப்பட்டவேளை 43 வயது நபர் ஒருவர்அவரை தாக்கினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ருசாஎலெஸ்மருடனும்  அவரது நண்பிகளுடனும் உரையாடிய பின்னர் அந்த நபர் தாக்குதலில் ஈடுபடுவதை சிசிரிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

அந்த நபர் எலஸ்மெரின் முகத்தில் ஓங்கிகுத்துவதையும் அவர் நிலை தடுமாறி கீழே விழுவதையும் அதன் பின்னர்அந்த நபர் காலால் உதைப்பதையும் சிசிரிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

இதனை தொடர்ந்து அங்கு காணப்பட்டவர்கள் அவரை அகற்றுகின்றனர்.

இந்த தாக்குதல் இனரீதியிலானதா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவி;த்துள்ள காவல்துறையினர் இருவரும் அறிமுகமாகாதவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் முஸ்லீம்கள் குறித்து கருத்து தெரிவித்த பி;ன்னரே தாக்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தூண்டப்படாத எப்போவது இடம்பெறும் சம்பவம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர் எலெஸ்மர் முகநூல் பதிவொன்றில் மனிதாபிமானமின்மை அதிகரித்துள்ளமையே தன் மீதானதாக்குதலிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகத்தினர் இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வது வழமையாகிவிட்டது நான் சிட்னியில் பிறந்து வளர்ந்தவள் நான் ஒரு முஸ்லீம் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் வார்த்தைகள் மூலம்துஸ்பிரயோகங்களை அனுபவித்துள்ளேன் ஆனால் தாக்கப்படுவேன்என  நினைத்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.