பச்சை குத்திக்கொள்வதில் தீராத வெறிகொண்ட ஒரு பெண், கண்களில் பச்சை குத்திக்கொண்டதால் பார்வை இழக்கும் நிலைக்கு சென்றார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ’டிராகன் பெண் ’ என்று அழைக்கப்படும் Amber Luke (24)க்கு பச்சை குத்திக்கொள்வது என்றால் அப்படி ஒரு ஆசை. சுமார் 26,000 டொலர்கள் செலவு செய்து, தலை முதல் பாதம் வரை 200 இடங்களில் பச்சை குத்திக்கொண்டுள்ள Amber, தனது கண்களையும் நிறம் மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி கண்களில் பச்சை குத்திகொள்வது என தீர்மானித்தார் Amber. அவரது கண்களுக்குள் 40 நிமிடங்கள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அடுத்த வாரமளவில் நாட்டில் குண்டு வெடிக்கலாம்!
அடுத்த வாரங்களில் நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவினால் இந்த முறைப்பாடு நேற்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை தேர்தல் நலனுக்காக மேற்கொள்ள சதி திட்டமொன்றை செய்து வருவதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
Read More »பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது – ஐ.நா.வில் இந்தியா
அரசியல் லாபத்துக்காக பெண்களின் குரலை பாகிஸ்தான் நசுக்குவதாகவும், அந்த நாடு பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் ஐ.நா.வில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து ஐ.நா.வில் எழுப்பி வரும் பாகிஸ்தான், கடந்த 29-ந்திகதி பாதுகாப்பு கவுன்சிலிலும் இது தொடர்பாக குற்றம் சாட்டியது. குறிப்பாக காஷ்மீரின் தற்போதைய நிலவரம், அங்கு பெண்களின் நிலை என பல்வேறு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி மலீகா லோதி பேசினார். இதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, அமைதி, பாதுகாப்பு மற்றும் பெண்கள் தொடர்பாக பாதுகாப்பு ...
Read More »அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்கும், ஆவணத்தை சமர்ப்பிக்க முடியுமா?
கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என்று அவர் இன்று -06- கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய ராஜபக்ச கைவிட்டமைக்கான சான்றிதழை, பொதுஜன பொரமுன கட்சியால் சமர்பிக்கமுடியுமா? என்று அவர் சவால் விடுத்தார். மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடம்பெற்ற ...
Read More »காலநிலை மாற்றத்தினால் பாரிய நெருக்கடிகள் உருவாகலாம்!
காலநிலை நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும் என 11,000விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். பூமி காலநிலைதொடர்பில் அவரசநிலையை எதிர்கொள்கின்றது என நாங்கள் தெளிவாகவும் எந்தவித சந்தேகமும் இன்றியும் தெரிவிக்கின்றோம் என 11,000 விஞ்ஞானிகள் அறிக்கையொன்றில் எச்சரித்துள்ளனர். பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாங்கள் வாழும் முறையை மாற்றவேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு எங்கள் சர்வதேச சமூகம் செயற்படும் விதத்தில் பாரிய மாற்றங்கள் அவசியம் அவை இயற்கையை கையாளும் விதத்தில் மாற்றங்கள் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இழப்பதற்கு நேரமில்லை ...
Read More »வாக்களிக்கும்போது புர்கா, நிகாப்பை அகற்ற வேண்டும் !
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புர்கா மற்றும் நிகாப் அணிவதை எங்களால் தடை செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க ...
Read More »மஹிந்த தரப்பிடம் தமிழருக்கு நீதியில்லை!
போரின் போதும், அதற்கு பின்னரும் வலிந்து நபர்களை காணாமலாக்கிய மஹிந்த தரப்பினரிடம் தமிழ் மக்கள் ஒருபோதும் நீதியை எதிர்பார்க்க முடியாது. காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அரசாங்கத்திடம் இருந்து நிவாரணத்தினை எதிர்பார்க்கவில்லை மாறாக உண்மையான தீர்வினையே எதிர்பார்க்கின்றார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்த காலத்தில் காணாமல் போனோரை எவ்வாறு கொண்டு வருவது என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை காணாமலாக்கப்பட்டுள்ளோரது உறவினர்களது எதிர்பார்ப்பினை அவமதிப்பதாகவே கருதப்படும். யுத்த ...
Read More »பூனைக் குட்டிகளை கைவிட்டுச் சென்ற ஜோடியை தேடும் அவுஸ்திரேலிய காவல் துறை!
அவுஸ்திரேலியா நாட்டில் தென்பகுதியிலுள்ள அடிலேய்ட் நகரத்திலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் பூனை குட்டிகளை கைவிட்டு சென்ற தம்பதிகளை காவல் துறை தேடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று இரண்டு பூனை குட்டிகளை தம்பதியினர் கடைத்தொகுதி ஒன்றில் கைவிட்டு செல்லும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. பூனையை கண்ட துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவலை தெரிவித்து அவற்றை பத்திரமாக மீட்டு காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில், குறித்த சிசிரிவி காணொளியியை வைத்து குறித்த தம்பதிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இரண்டு பூனைக்குட்டிகளும் ஆண் ...
Read More »2 ஆவது உலகப்போரின்போது யூத குடும்பத்தை காப்பாற்றிய கிரேக்க பெண்!
கிரேக்கத்தைச் சேர்ந்த 92 வயது பெண்ணொருவர் இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாஸிகளிடமிருந்து தன்னால் காப்பாற்றப்பட்ட இரு யூத உடன்பிறப்புகளை முதல் தடவையாக 7 தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் கழித்து சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் ஜெருசலேமிலுள்ள இன அழிப்பு ஞாபகார்த்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறிப்பிட்ட கிரேக்கப் பெண்ணும் அவரால் காப்பாற்றப்பட்ட உடன்பிறப்புகளும் உணர்வுமேலீட்டால் கண்ணீர் சிந்தி அழுதனர். இரண்டாம் உலகப் போர் காலத்தில் இளவயதினராக இருந்த மெல்பொமெனி தினா என்ற மேற்படி கிரேக்கப் பெண் குறிப்பிட்ட யூத குடும்பத்தைச் சேர்ந்த ...
Read More »சிங்கள,பௌத்த வீரன் யார்? சஜித்திற்காக? கோத்தாவிற்கா?
இலக்கை ஒரு சிங்கள, பௌத்தர்களின் நாடு என்கின்ற நிகழ்ச்சி நிரலிலே செல்கின்ற கோத்தாபயவாக இருக்கலாம், சஜித் பிரேமதாஸவாக இருக்கலாம் இருவருக்குமே தமிழ் மக்களின் வாக்குகள் கிடையாது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மன்னாரில் நேற்று திங்கட்கிழமை(4) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, எங்களுக்கு எதுவுமே தரமாட்டோம் என்கின்றவர்களை நீங்கள் கட்டி அனைக்க முற்படுகின்றீர்கள்.கட்டி அனைத்தாலும் பரவாக இல்லை அடக்கு முறையாளர்களையும், கொலைகாரர்களையும் ஆதரிக்கின்றார்கள். இரண்டு பகுதியினரும் தாங்கள் தான் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal