காலநிலை நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும் என 11,000விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
பூமி காலநிலைதொடர்பில் அவரசநிலையை எதிர்கொள்கின்றது என நாங்கள் தெளிவாகவும் எந்தவித சந்தேகமும் இன்றியும் தெரிவிக்கின்றோம் என 11,000 விஞ்ஞானிகள் அறிக்கையொன்றில் எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாங்கள் வாழும் முறையை மாற்றவேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு எங்கள் சர்வதேச சமூகம் செயற்படும் விதத்தில் பாரிய மாற்றங்கள் அவசியம் அவை இயற்கையை கையாளும் விதத்தில் மாற்றங்கள் அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இழப்பதற்கு நேரமில்லை என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் காலநிலை மாற்ற நெருக்கடிகள் ஆரம்பித்துவிட்டன,இந்த நெருக்கடி விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக இடம்பெறுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது நாங்கள் எதிர்பார்த்ததை விட கடுமையானதாக உள்ளது ,சூழல்இயல்அமைப்புகளை இது அச்சுறுத்துகின்றது,மனிதகுலத்தின் தலைவிதிக்கு அச்சுறுத்தலைஏற்படுத்துகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal