கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என்று அவர் இன்று -06- கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய ராஜபக்ச கைவிட்டமைக்கான சான்றிதழை, பொதுஜன பொரமுன கட்சியால் சமர்பிக்கமுடியுமா? என்று அவர் சவால் விடுத்தார்.
மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.
இந்த உடன்படிக்கையின் கீழ் ஒரு அங்குலமேனும் அமெரிக்காவுக்கு வழங்கப்படப்போகிறது என்று அயாராவது நிரூபித்தால் தாம் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக மங்கள சமரவீர தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கையின் கீழ் நாடு முழுவதும் 12 மாவட்டங்களின் ஊடாக காணித்திட்டங்கள் 12.1 பில்லியன் ரூபாய் செலவீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.