பூனைக் குட்டிகளை கைவிட்டுச் சென்ற ஜோடியை தேடும் அவுஸ்திரேலிய காவல் துறை!

அவுஸ்திரேலியா நாட்டில் தென்பகுதியிலுள்ள அடிலேய்ட் நகரத்திலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் பூனை குட்டிகளை கைவிட்டு சென்ற தம்பதிகளை காவல் துறை தேடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று இரண்டு  பூனை குட்டிகளை தம்பதியினர் கடைத்தொகுதி ஒன்றில் கைவிட்டு செல்லும் காட்சி சிசிரிவி  கமராவில் பதிவாகியுள்ளது.

பூனையை கண்ட துப்புரவு பணியில்  ஈடுபட்டிருந்த ஊழியர்  பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகவலை தெரிவித்து அவற்றை பத்திரமாக மீட்டு காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிசிரிவி காணொளியியை வைத்து குறித்த தம்பதிகளை காவல் துறையினர்   தேடி வருகின்றனர்.

இரண்டு பூனைக்குட்டிகளும் ஆண் அவை ஏழு வார வயதுடையவை. அவை கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், ஒரு குறுகிய முடியுடனும் மற்றொன்று ஒரு நீண்ட முடியுடனும் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் கடைத்தொகுதிக்குள் நுழையும் போது ஒரு கையில் ஒரு பூனைக்குட்டியை ஏந்தியிருப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது.

மேலும், ஜோடி வெளியேற முன் அவர் உட்புற தோட்டத்தில் உள்ள தாவரங்களுக்கிடையில் பூனைக்குட்டியை வைப்பதைக் காணலாம்.

பின்னர் அவர்கள் கடைத்தொகுதிக்குள் நின்று, அந்தப் பெண் தனது கைப்பையில் இருந்து இரண்டாவது பூனைக்குட்டியை அகற்றி ஆணுக்கு கொடுக்கிறாள்.

அவர்கள் தோட்டத்திற்குத் திரும்புகிறார்கள், அந்த பூனைக்குட்டியையும் மீண்டும் தாவரங்களுக்கு இடையில் வைக்கும் காட்சியும்  பதிவாகியுள்ளது.

தற்போது தெற்கு அவுஸ்திரேலிய காவல் துறை தலைமையகத்தில் பூனைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூனைகள் கைவிடப்பட்டமை தொடர்பான விசாரணை தொடரும் அதேவேளையில் அவைகள் தத்தெடுப்புக்கு கொடுக்கப்பட மாட்டாது.

தென் அவுஸ்திரேலிய சட்டத்தின் கீழ், ஒரு மிருகத்தை கைவிட்டதாக யாராவது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 20,000 டொலர் அபராதம் விதிக்கப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது.