Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கன்பரா மைதானத்தில் இடம் பெறுகின்றது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Read More »

கோட்டாவுக்கு எதிரான வழக்கை விஷேட நீதாய மேல் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி அறிவிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்தம அரசாங்க காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில்! 45 ஆயிரம் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சுமார் 45 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை என தெரியவந்துள்ளது. சிட்னியை 40 டிகிரி செல்சியஸ் அளவுள்ள அனல்காற்று தாக்கக்கூடுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அவுஸ்திரேலியாவில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவசரகாலக் குழு ஆராய்ந்து வருவதாக  மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. சிட்னியின் புற நகர்ப் பகுதியில் உள்ள சில வட்டாரங்களில் வீடுகள், கடைகளில் மின்சாரம் இல்லை. வாகனமோட்டிகள், போக்குவரத்து சமிக்ஞைகளைக் கடக்கும்போது ...

Read More »

இந்தியா இணைய மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா!

என்.எஸ்.ஜி நாடுகள் பட்டியலில் இந்தியா இணைவதற்கு சீனா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறி அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் அதே அடிப்படையில் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்தியா தெரிவித்தது. ஆனால், இந்தியாவின் முயற்சிக்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த நிலையில், ...

Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் படமாகிறது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். இதில் ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ...

Read More »

மொட்டுக்குள் பிளவு!

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதென, தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பெரமுனவால் எடுக்கப்படும் தீர்மானங்களில் கடும் அதிருப்தி கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளனரென அறியமுடிகின்றது. அதிருப்தியாளர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனரென அறியமுடிகின்றது. அதிருப்தியாளர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

Read More »

சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம்! கைச்சாத்திடவேண்டாமென எதிர்ப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம், இன்று (28) கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளமான 700 ரூபாய்க்கு, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டாமென வலியுறுத்தி, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு கட்டமாக, முதலாளிமார் சம்மேளனத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை, இன்று (28) நடத்துவதற்கு, பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன. கடந்த நான்கு மாதங்களாக இழுபறியிலிருந்த கூட்டு ஒப்பந்த விவகாரம், கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் ​போது, இருதரப்பு இணக்கத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படைச் சம்பளமாக ...

Read More »

அவுஸ்திரேலியாவினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று துறைமுக படகுகள்

அவுஸ்த்ரேலியாவினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று மூன்று துறைமுகு படகுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா  கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்றது. இத் துறைமுக படகுகள் 2017 ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ருன்பலினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, குறித்த படகுகளை சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையஸ் ஹட்ஷ்சன் பாதுகாப்பு ...

Read More »

மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் உயிரிழந்த சோகம்!

மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் கரணவாய் தெற்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.   பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் குலதீபன் பிரிந்தா (வயது-32) என்ற கற்பிணிப் பெண் வைத்தியசாலையில் வேலை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அவர் சற்று நேரத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார். அவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில்  பருத்தித்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சுயாதீனமான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயார்!

போக்குவரத்து அமைச்சராக தான் பொறுப்பிலிருந்த காலக்கட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை பெற்றுக் கொண்ட முறைமையில் முறைக்கேடுகள் இடம் பெற்றிருந்தால் கோப் குழுவினர் ஆதரத்துடன் முன்னிலைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறுமாயின் முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கத் தயார் எனவும் குறிப்பிட்டார். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் கோப் குழுவினர் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் பொறுப்பில் ...

Read More »