முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி அறிவிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்தம அரசாங்க காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது குறித்த வழக்கை விசாரிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகள் தரப்பில் எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய விசாரணையின் போது கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.