போக்குவரத்து அமைச்சராக தான் பொறுப்பிலிருந்த காலக்கட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை பெற்றுக் கொண்ட முறைமையில் முறைக்கேடுகள் இடம் பெற்றிருந்தால் கோப் குழுவினர் ஆதரத்துடன் முன்னிலைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறுமாயின் முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கத் தயார் எனவும் குறிப்பிட்டார்.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் கோப் குழுவினர் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் பொறுப்பில் இருந்த போது இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டது. இதன்பொழுது எவ்விதமான நிதியுதவியும் எத்தரப்பில் இருந்தும் வழங்கப்படவில்லை. மாதந்த கொடுப்பனவுகளின் ஊடாகவே பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டது.
இதற்கு அமைச்சரவையின் அங்கிகாரமும் கிடைக்கப் பெற்றது. இக்காலக்கட்டத்தில் 18 பேருந்துகள் இலவசமாக கிடைக்கப் பெற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமையானத உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டார்.