மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கரணவாய் தெற்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் குலதீபன் பிரிந்தா (வயது-32) என்ற கற்பிணிப் பெண் வைத்தியசாலையில் வேலை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வீடு திரும்பிய அவர் சற்று நேரத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார்.
அவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal