அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சுமார் 45 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை என தெரியவந்துள்ளது.
சிட்னியை 40 டிகிரி செல்சியஸ் அளவுள்ள அனல்காற்று தாக்கக்கூடுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக அவுஸ்திரேலியாவில் கடுமையான வெயில் கொளுத்துகிறது.
பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவசரகாலக் குழு ஆராய்ந்து வருவதாக மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிட்னியின் புற நகர்ப் பகுதியில் உள்ள சில வட்டாரங்களில் வீடுகள், கடைகளில் மின்சாரம் இல்லை.
வாகனமோட்டிகள், போக்குவரத்து சமிக்ஞைகளைக் கடக்கும்போது கவனமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
Double Bay பகுதியில் சுமார் பத்தாயிரம் வீடுகளுக்கு மீண்டும் மின்சார இணைப்புக் கிடைத்து விட்டதாக Ausgrid நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதி வரை கடுமையான கோடை தொடரும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.