முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடிக்குரிய நந்திக்கடல் மற்றும் நாயாறு நீரேரிகள் என்பன முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன. சுமார் 21 ஆயிரத்து 265 ஏக்கர் நிலப் பரப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தால் இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தினுள் மனிதர்கள் பிரவேசிப்பது குற்றமாகும். இரண்டு நீரேரிகளிலும் தொழில் நடவ டிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 9 ஆயி ரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலப் பரப்புக்களை உள்ளடக்கிய அரசிதழ் அறிவித்தல் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
விடுதலைப் புலிகளின் சீருடை வைத்திருந்த இருவர் கைது!
முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில், தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் என, காவல் துறையினர் தெரிவித்தனர். ஒட்டுச்சுட்டான் பேராறு பகுதியில் வைத்து, முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »ஆஸி. நிர்ணயித்த 311 ரன்கள் இலக்கு நிர்மூலம்!
செஸ்ட்ர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இங்கிலாந்து, இதன் மூலம் 4-0 என்று ஒயிட்வாஷுக்குத் தயாரானது இங்கிலாந்து. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ் சதங்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது, இலக்கை விரட்டிய இங்கிலாந்து ஜேசன் ராயின் 83 பந்து சதத்தினாலும் பேர்ஸ்டோ, பட்லர் அதிரடியில் 45வது ஓவரில் 314/4 என்று வெற்றி பெற்று தொடரில் 4-0 என்று முன்னிலை பெற்றது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து கடைசி ...
Read More »அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தின் நாடுகடத்தல் உறுதி!
அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியிருந்த நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் பத்துமாத குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்தது. இதனை அடுத்து நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 100 நாட்களுக்கும் ...
Read More »விரைவில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம்!
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா மற்றும் சில ஐஓஎஸ் பயனர்களுக்கு க்ரூப் காலிங் வசதி மே மாத வாக்கில் ஐஓஎஸ்-இல் v2.18.52 மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.145 வெர்ஷன்களிலும் சோதனை செய்யப்பட்டது. இத்துடன் ...
Read More »வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி!- டிரம்ப் பெருமிதம்
அமெரிக்க செனட் சபையில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார். எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா சமீபத்திய சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக ...
Read More »வெளிநாடுகளில் வசிக்கின்ற 14 தமிழர்களுக்கு தாயகம் திரும்பத்தடை!
வெளிநாடுகளில் வசிக்கின்ற 14 தமிழர்களுக்கு இலங்கை வருவதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியாக்கப்பட்டுள்ளது. 20ம் திகதி குறிக்கப்பட்ட இந்த வர்த்தமானியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியாரத்ன வெளியிட்டுள்ளார். குறித்தப் 14 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 2012ம் ஆண்டு 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் இலக்கம் 4(7) ஒழுங்குவிதியின் கீழ் பெயர் குறிக்கப்பட்ட ஆட்கள் பற்றிய நிரலில், தனியாட்கள் என்றத் தலைப்பின் கீழ், இதற்கான திருத்தம் ...
Read More »காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது! – அமெரிக்கா
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ சாங்குயி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அங்கம் வகித்து வருகிறது. இந்த அமைப்பின்கீழ் 3 நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விவகாரங்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என தெரிவித்தார். ஆனால் சீனாவின் ...
Read More »எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில்!
நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்ட பார்த்திபன் எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். நடிகர், இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான சிந்தனைக்காக மட்டும் அல்லாமல் சமூக அக்கறைக்காகவும் பாராட்டப்படுபவர். அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்தி வர, இதுகுறித்து பார்த்திபனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, ‘பெசண்ட் நகரில் ஒரு படகு போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டேன். பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து அந்த குப்பைகள் போடப்படுவதால் மீனவர்களின் வலைகளில் 20 சதவீதம் தான் மீன்கள் கிடைக்கின்றன. 80 ...
Read More »ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் இருந்து அமெரிக்கா விலகல்!
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக இருந்து வருபவர் நிக்கி ஹாலே. இவர் இன்று செய்தியாள்ர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			