முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில், தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் என, காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஒட்டுச்சுட்டான் பேராறு பகுதியில் வைத்து, முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal