வெளிநாடுகளில் வசிக்கின்ற 14 தமிழர்களுக்கு இலங்கை வருவதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியாக்கப்பட்டுள்ளது.
20ம் திகதி குறிக்கப்பட்ட இந்த வர்த்தமானியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியாரத்ன வெளியிட்டுள்ளார்.
குறித்தப் 14 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
2012ம் ஆண்டு 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் இலக்கம் 4(7) ஒழுங்குவிதியின் கீழ் பெயர் குறிக்கப்பட்ட ஆட்கள் பற்றிய நிரலில், தனியாட்கள் என்றத் தலைப்பின் கீழ், இதற்கான திருத்தம் மேற்காள்ளப்பட்டுள்ளது.
இதன்படி நடராஜா சத்தியசீலன் அல்லது சீல்மாறன், கமலசிங்கம் அருணசிங்கம் அல்லது கமல், அனரனிராசா கெலிஸ்டர் அல்லது பரதன், சிவசுப்ரமணியம் ஜெயகணேஸ் அல்லது கணேஸ் அல்லது சாம்ராஜ், பொன்னுசாமி பாஸ்கரன் அல்லது ஜெயகரன், வேலாயுதம் பிரதீப்குமார் அல்லது கீபன், சிவராசா சுரேந்திரன் அல்லது வரதன், சிவகுருநாதன் முருகதாஸ் அல்லது கதிரவன், திருநீலகண்டன் நகுலேஸ்வரன் அல்லது புஸ்பநாதன், மகேஸ்வரன் ரவிச்சந்திரன் அல்லது மெண்டிஸ் அல்லது திருக்குமரன், சுரேஸ்குமார் பிரதீபன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி, ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்ட்டர், டோனி ஜயான் முருகேசப்பிள்ளை ஆகியோருக்கு புதிதாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.