நீண்டகால தடுப்புமுகாமில் உள்ள இரு தமிழ் அகதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் நோக்குடன், ஆண்டு 12 இல் கற்கும் உயர்தர கல்லூரி மாணவியான றேணுகா இன்பகுமார் என்ற ஈழத்தமிழ் மாணவியே அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்றுள்ளார். பத்து ஆண்டுகளாக தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த தமிழ் அகதிகள் இருவரும், மனிதாபிமானமற்ற முறையில் கொடுமையான வாழ்வுக்குள் சிக்குப்பட்டுள்ளதை, சர்வதேச சமூகங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, அவரது பயணம் அமைந்துள்ளது. மெல்பேணில் உள்ள மைற்றா தடுப்புமுகாமில் உள்ள இருவரையும், கடந்த சில வருடங்களாக சந்தித்துவந்த அவர், அவர்களது காலவரையற்ற தடுப்புமுகாம் வாழ்வை முடிவுக்கு ...
Read More »அதிக வாசிப்பு
அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு பரவத்தொடங்கியது வைரஸ்!
அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இதுவரை 40 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ; ஒருவர் உயிரிழந்துள்ளார் எனினும் இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் நோய்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள்பதிவாகியுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் பிரட் ஹசார்ட் இதனை உறுதி செய்துள்ளார். ஈரானிலிருந்து வருவபவர்களிற்கான தடை நடைமுறைக்கு வருவதற்கு முதல் நாள் அவுஸ்திரேலியாவிற்கு வந்த நபர் ஒருவர் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் ...
Read More »அவுஸ்திரேலியாவில் கைகுலுக்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் !
கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் கைகுலுக்கிக்கொள்வதை தவிர்ப்பது புத்திசாலித்தனமாக நடவடிக்கையாக அமையும் என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நான் எனது நாளாந்த நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களை கைகுலுக்கிக்கொள்வதை நிறுத்தி விட்டு முதுகில் மெதுவாக தட்டுமாறு கேட்டுள்ளார் கைகுலுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். முத்தமிடும்போது எச்சரிக்கையாகயிருங்கள் எனவும் நியுசவுத்வேல்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
Read More »கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் முதல் உயிரிழப்பு!
உலகையே அச்சுறுத்துலுக்கு ஆளாக்கி வரும் கரோனா வைரஸ் அமெரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் விட்டு வைக்கவில்லை. இரு நாடுகளிலும் கரோனா வைரஸுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, ஈரான், இத்தாலி, மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார். கரோனா வைரஸ் பலருக்கும் பரவியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலையை பிறப்பித்துள்ளனர். சீனாவின் ஹுபே மாகாணத்தில், வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2900 பேர் உயிரிழந்துள்ளனர், 85 ஆயிரம் ...
Read More »கேலி கிண்டலுக்குள்ளான சிறுவன் : அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு!
அவுஸ்திரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான குவாடன் பெல்ஸின் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலானதை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது. வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ;தெரிவித்ததை அவரது தாய் காணொளி ஒன்றை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட விளையாட்டு ...
Read More »ஆஸ்திரேலியாவில் நம்பிக்கையிழந்த அகதி குடும்பம்: கனடாவில்……..!
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைகான கடும் போராட்டத்தை எதிர்கொண்டு அங்கு வாழ்வதற்கான நம்பிக்கையிழந்த பாலஸ்தீனிய அகதிகளுக்கு, கனடாவில் புதியதொரு வாழ்க்கை அமைந்திருக்கின்றது. கனடா அரசின் ஸ்பான்சர் முறையின் கீழ் அவர்களுக்கு அங்கு நிரந்தரமாக வசிக்க (Permanent Residency) இடமளிக்கப்பட்டுள்ளது. திமா அவரது கணவர் ஹனி மற்றும் அவர்களது குழந்தைக்கே இந்த புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. திமா எனும் பெண் குவைத்தில் பிறந்த நாடற்ற பாலஸ்தீனிய அகதி. அவரைப் போலவே நாடற்ற பாலஸ்தீனிய அகதியான ஹனியை ஈராக்கில் சந்தித்து அங்கிருந்து இருவரும் ஆஸ்திரேலியா நோக்கி பயணமாகியுள்ளனர். ஆஸ்திரேலியா ...
Read More »தமிழர் விளையாட்டு விழா 2020 – சிட்னி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நடத்தப்படும் தமிழர் ஒன்றுகூடலும் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் நினைவாக நடத்தப்படும் விளையாட்டு விழா நிகழ்வும் 26 – 01 – 2020 அன்று துங்காபி பினாலொங் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. காலை எட்டு மணிக்கு கிரிக்கற் மற்றும் காற்பந்தாட்டம் ஆகிய போட்டிகளுடன் ஆரம்பமான விளையாட்டு நிகழ்வில் சிறுவர்களுக்கான போட்டிகள் மதியம் ஒரு மணி தொடக்கம் நடைபெற்றன. சாக்கோட்டம் தேசிக்காயும் கரண்டியும் ஓட்டம் தவளைப்பாய்ச்சல் பழம்பொறுக்குதல் போன்ற சிறுவர்களுக்கான போட்டிகளும் பெரியவர்களுக்கான ஓட்டப்போட்டி பின்னால் ஓடும் போட்டி என்பனவும்நடைபெற்றன. மாலையில் ...
Read More »தஞ்சமடைய முயற்சிப்பவர்களை ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம்!
ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள், தற்போது மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் இருக்கும் அகதிகளை அமெரிக்கா வர வேண்டாம் என எச்சரிப்பதாகக் கூறுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன். “இதுகுறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது,” எனக் கூறும் பீட்டர் டட்டன், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுகளில் உள்ள அகதிகளை வெளியேற்ற நான் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படியான செயல் தன்னை சினங்கொள்ள வைப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத் தீ ! கான்பராவில் அவசர காலநிலை பிரகடனம்!
அவுஸ்திரேலியாவின், கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர். கான்பராவில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீயாக இதனை தெரிவித்துள்ளனர். இதனால் கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிட்னிக்கும் மெல்போர்னுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த சிறிய பிரதேசத்தில் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் உள்ளனர். 2003 ஆம் ஆண்டில், கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 500 ...
Read More »ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சீனர்கள் கைது!
சீனா எங்கும் கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல் பரவலாக உள்ள நிலையில், அப்பதற்றம் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் வடக்கு கடல் பகுதியினூடாக 6 சீனர்கள் நுழைய முயன்ற சம்பவம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த ஆறு சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்திருக்கின்றனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal