கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் கைகுலுக்கிக்கொள்வதை தவிர்ப்பது புத்திசாலித்தனமாக நடவடிக்கையாக அமையும் என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நான் எனது நாளாந்த நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களை கைகுலுக்கிக்கொள்வதை நிறுத்தி விட்டு முதுகில் மெதுவாக தட்டுமாறு கேட்டுள்ளார்
கைகுலுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். முத்தமிடும்போது எச்சரிக்கையாகயிருங்கள் எனவும் நியுசவுத்வேல்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal