அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு பரவத்தொடங்கியது வைரஸ்!

அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் இதுவரை 40 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ; ஒருவர் உயிரிழந்துள்ளார் எனினும் இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் நோய்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள்பதிவாகியுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் பிரட் ஹசார்ட் இதனை உறுதி செய்துள்ளார். ஈரானிலிருந்து வருவபவர்களிற்கான தடை நடைமுறைக்கு வருவதற்கு முதல் நாள் அவுஸ்திரேலியாவிற்கு வந்த நபர் ஒருவர் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள அமைச்சர் அந்த நபரின் சகோதரியும் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவர் ஈரான் செல்லவில்லை இதன் காரணமாக அவர் உள்நாட்டிலேயே நோய்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

அவரது சகோதரர் மூலமாக அவரிற்கு நோய் தொற்றியிருக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார் இதேவேளை 53 வயது சுகாதார பணியாளர் ஒருவரும் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். இது அவுஸ்திரேலியாவில் ; மனிதனிலிருந்து மனிதனிற்கு நோய் தொற்றிய இரண்டாவது சம்பவமாக காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் நியுசவுத்வேல்சில் ஆறு பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானிற்கு சென்று திரும்பிய ஒருவர் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. தாஸ்மேனியாவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட ஈரானிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து மலேசியா ஊடாக தாஸ்மேனியா சென்றுள்ளார். எனினும் இந்த நபர் தாஸ்மேனியா திரும்பிய பின்னர்அதிகம் வெளியில் நடமாடவில்லை இதனால் சமூகத்திற்கு அதிக பாதிப்பு இருக்காது என தாஸ்மேனியாவின் பொதுச்சுகாதார இயக்குநர் மார்க் வெய்ட்ச் தெரிவித்துள்ளார்.