நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இந்த விடயத்தில் பொலிஸாரும் நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்துள்ளார்கள் என சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட பொலிஸார் மீதும் சட்ட ...
Read More »கொட்டுமுரசு
காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?
வடக்கு, கிழக்கில் தினந்தோறும் வேதனையுடனும் தவிப்புடனும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியாமலும் போராட்டங்க ளுடனும் வாழ்ந்துகொண்டி ருக்கும் காணாமல் போனவர் களின் உறவுகளான பாதிக் கப்பட்ட மக்களுக்கு பிரதான வேட்பாளர்கள் எவ்வாறான தீர்வை வழங்கப்போகின் றார்கள் என்பது ஒரு கேள் வியாக எழுந்து நிற்கின்றது. அதாவது மிக முக்கியமாக மூன்று கட்சிகளிலிருந்தும் மூன்று பிரதான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் மூவரும் இந்த காணாமல்போனோர் விவகாரத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்தை முன்வைக் கப்போகின்றனர் என்பதே இங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் ...
Read More »வட, கிழக்கில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடுகளை அனுமதிக்கக்கூடாது!
வடக்கு, கிழக்கில் பௌத்த பேரினவாத நடவடிக்கைகள் முன்னெடுத்து தமிழர் தாயக கோட்பாடுகளை சிதைப்பதற்கான நடவடிக்கைகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தமை வரலாறாக உள்ளது. விடுதலைப்புலிகள் பலம்பெற்றிருந்த காலப்பகுதியில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் முன்னைய ஆட்சிக் காலத்தில் பௌத்த பேரினவாத செயற்பாடுகள் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து வருகின்றமையும் அதற்கு தென்பகுதி இனவாத கட்சிகளும் அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றமையும் பெரும் கவலையளிக்கும் செயற்பாடாக ...
Read More »தமிழ் மக்களை ஏமாற்ற முனைபவர்கள் இறுதியில் ஏமாற்றமடைவர்!
எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் இப்போது சூடு பிடித்திருக்கின்றது. நாட்டின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கிக்காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி வருகின்றனர். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கருத்துகள் இப்போது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் எந்தளவுக்கு சாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டி இருக்கின்றது. பல்வேறு ...
Read More »ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள்!
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியானதையடுத்து 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள போதிலும் இன்றைய தினம் இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலின் பின்னர் 35 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 35 பேரும் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக இம்முறை 41 வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 16 உறுப்பினர்களும் சுயாதீன வேட்பாளர்களாக 17 பேரும் புதிய கட்சிகளின் சார்பில் ...
Read More »சூ என் லாய் முதல ஜி ஜின் பிங் வரை!
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சீனப் பிரதமர் சென்னைக்கு வரவிருக்கிறார். சீனப் புரட்சியில் தனது மாணவப் பருவத்திலிருந்தே பங்கேற்று அந்நாட்டின் முதல் பிரதமரான சூ என் லாய் 1960-ல் சென்னைக்கு வந்திருந்தார். இப்போது இருக்கக்கூடிய ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நகர பள்ளிக் குழந்தைகளெல்லாம் பேருந்து மூலம் அந்த மைதானத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பாண்டுங் மாநாட்டுக்குப் பிறகு, பஞ்சசீலக் கொள்கையை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டு ‘இந்தி – சீனி பாய் பாய்’ என்று சொன்ன காலம் அது. விளம்பரத் ...
Read More »வாழ்வுரிமையைக் காக்கும் வாக்குரிமை..!
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இரு வாரம் கடந்துள்ள நிலையில், அரசியல் களத்தில் தேர்தலுக்கு எஞ்சியுள்ள நாட்களில் என்ன நடக்கும் என்ற கேள்விக் கணைகளோடு நாட்டு மக்களும், அரசியல் அவதானிகளும் ஒவ்வொரு விடியலையும் எதிர்பார்த்தே வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களின்பால் என்றுமில்லாத அக்கறை மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இக்காலங்களில் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் நாட்கள், மக்களின் மனச்சாட்சியை பரிசோதிக்கும் பரீட்சைத்தளங்களாக அமைகின்றன. ஒரு மனிதனின் மனச்சாட்சியே அவனுக்கு நீதிபதி. அத்தகைய மனச்சாட்சியின் அடிப்படையிலேயே அவரவர் விரும்பும் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வாக்காளர்கள் ...
Read More »பொது வேட்பாளருக்கான கோரிக்கை..!
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே தமிழ்மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்த விதமான உத்தரவாதத்தையும் தர முடியாது என கூறியுள்ளனர். அவர்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சிகளாகிய பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன கூட இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ்மக்கள் தொடர்பில் உறுதியான ஓர் அரசியல் கொள்கையை அல்லது நிலைப்பாட்டை வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சார்ந்த ...
Read More »நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள செஞ்சோலை பிள்ளைகள்!
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை வரும் 15 ஆம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் எழுத்து மூலமான அறிவித்தலை செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் தற்காலிக வீடுகளில் ஒட்டியுள்ளனர். இதனால் செஞ்சோலைப் பிள்ளைகள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த வருடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் பின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இருந்து வளர்ந்த பிள்ளைகள் திருமணம் செய்த நிலையில் ...
Read More »‘தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது’!
மதுரைக்கு “மீனாட்சி அம்மன்” பெருமை சேர்ப்பது போல், மதுரையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவிலும், வைகை நதிக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் “கீழடி” தமிழ்நாட்டுக்கும் – இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது. “தொல்லியல், மரபு குறித்த ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது” என்று “கீழடி” ஆய்வு பற்றி தமிழக அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், தனது துவக்கக் கருத்தை தெரிவித்திருக்கிறார். தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர், ஆணையாளராக இருக்கும் உதயசந்திரன். அவரது அரிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. பொதுவாக தமிழக அரசாங்கத்தின் கீழ் உள்ள ...
Read More »