பொது வேட்பாளருக்கான கோரிக்கை..!

ஜனா­தி­பதி தேர்­தலின் பிர­தான வேட்­பா­ளர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற கோத்­த­பாய மற்றும் சஜித் பிரே­ம­தாச ஆகிய இரு­வ­ருமே தமிழ்மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தி­லான தமது நிலைப்­பாடு குறித்து எழுத்தில் எந்­த­ வி­த­மான உத்­த­ர­வா­தத்­தையும் தர முடி­யாது என கூறி­யுள்­ளனர்.

அவர்கள் சார்ந்த பிர­தான அர­சியல் கட்­சி­க­ளா­கிய பொது­ஜன பெர­முன மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகியன கூட இந்த விட­யத்தில் தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள தமிழ்மக்கள் தொடர்பில் உறு­தி­யான ஓர் அர­சியல் கொள்­கையை அல்­லது நிலைப்­பாட்டை வேட்­பா­ளர்­களும் கொண்­டி­ருக்­க­வில்லை. அவர்கள் சார்ந்த கட்­சி­களும் கொண்­டி­ருக்­க­வில்லை என்­ப­தையே இது வெளிப் ­ப­டுத்தி உள்­ளது.

இதனால் தேர்­தலில் என்ன செய்­வது, யாரை ஆத­ரிப்­பது என்று தமிழ்மக்கள் மேற்­கொள்ள வேண்­டிய தீர்­மா­னத்­துக்­கான சிந்­த­னை மிகவும் கடு­மை­யாகி உள்­ளது என்றே கூற வேண்டும்.

தமிழ்மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் நாட்டின் அதிமுக்­கிய அரச தலை­வ­ராக – ஜனா­தி­ப­தி­யாகப் போகின்­றவர் எத்­த­கைய நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ளார், அவர் தங்­க­ளுக்கு என்ன செய்யப் போகின்றார் என்­பதை அறிந்து கொள்ள வேண்­டிய அத்­தி­யா­வ­சிய தேவை தமிழ்மக்­க­ளுக்கு இருக்­கின்­றது. இதனைத் தட்­டிக்­கழித்துவிட்டு, அவர்­களின் ஆத­ரவை எந்­த­வொரு வேட்­பா­ளரும் பெற முடி­யாது. இது தேர்தல் காலத்தின் பொது­வான யதார்த்தம்.

புறந்­தள்­ளிய செயற்­பா­டுகள்

கடந்த 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­படும் என்று தேர்தல் காலத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்த வாக்­ கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அது­மட்­டு­மன்றி, தமிழ்மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற்று ஜனா­தி­ப­தி­யா­கிய பின்னர் வழங்­கிய உறு­தி­மொ­ழி­க­ளையும் அவர் நிறை­வேற்­ற­வில்லை.

தமிழ்மக்­களைப் புறந்­தள்­ளி­யது போன்ற அவ­ரு­டைய செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்கள் துன்­பத்­துக்கு மேல் துன்­பங்­களை அனு­ப­வித்து, அர­சியல் ரீதி­யாக நிம்­மதி இழந்­துள்­ளார்கள். இந்த நிலையில் அந்த மக்கள் தொடர்பில் பிர­தான வேட்­பா­ளர்கள் எத்­த­கைய கொள்­கையை – நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை தமிழ்மக்கள் உறு­தி­யாகத் தெரிந்து கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளார்கள்.

கடந்த தேர்தல் கால படிப்­பி­னையின் அடிப் ­ப­டையில் அவர்கள் தங்­க­ளுக்­காக உறு­தி­யாகச் செயற்­ப­டு­கின்ற ஒரு­வ­ரையே தெரிவு செய்ய வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்ட போதிலும், ஆட்சி நிர்­வா­கத்தில் கூடிய செல்­வாக்கைச் செலுத்தக் கூடிய வல்­ல­மையைக் கொண்­டுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்மக்கள் எழுந்­த­மா­ன­மாக  வாக்­க­ளிக்க முடி­யாது.

ஏனெனில் இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிப்­பது என்­பது அவர்­க­ளு­டைய அர­சியல் தலை­ வி­தியைத் தீர்­மா­னிக்­கின்ற ஒரு முக்­கிய கைங்­க­ரி­ய­ம். அத்­த­கைய பொறுப்­பான விட­யத்தில் ஏனோதானோ என்று அவர்­களால் இருக்க முடி­யாது. செயற்­ப­டவும் முடி­யாது. எனவே, மிகவும் கவ­ன­மா­கவும் மிகுந்த பொறுப்­போடும் செயற்­பட வேண்­டி­ய­வர்­க­ளாக அவர்கள் இருக்­கின்­றார்கள்.

இந்த நிலையில் பிர­தான வேட்­பா­ளர்கள் தங்­க­ளு­டைய நிலைப்­பாட்டைத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தாத நிலையில் தேர்­தலில் வாக்­க­ளிப்­பதா இல்­லையா என்று சிந்­திக்க வேண்­டிய கட்­டாய நிலை­மைக்குத் தமிழ்மக்கள் ஆளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆனால் இந்த நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்­கின்ற வல்­ல­மையைக் கொண்­டுள்ள தமது வாக்­கு­களைப் பய­னுள்ள வகையில் பிர­யோ­கிக்க வேண்­டிய கட்­டா­யமும் அவர்­க­ளுக்கு உள்­ளது.

ஆகவே தேர்­தலை, மாற்று வழி­களில் எதிர்­கொள்­ள­வேண்­டிய கட்­டாய நிலை­மைக்கும் அது­பற்றி சிந்­திப்­ப­தற்கும் அவர்கள் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

நடை­முறை அர­சியல் நியதி

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யா­கவோ அல்­லது பிர­ம­ரா­கவோ வரு­வ­தற்­கான ஏற் ­பா­டுகள் எதுவும் கிடை­யாது. அத்­த­கைய ஒரு நிலையை உரு­வாக்­கு­வ­தற்கு பேரின அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் தலை­வர்­களும் ஒரு­போதும் தயா­ராக இருக்­க­வில்லை. அதற்­கான சிந்­த­னை  அவர்­க­ளிடம் எழுந்­ததும் இல்லை.

சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் உரிய முறையில் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அத்­த­கைய தெளி­வான ஆணித்­த­ர­மான உறு­திப்­பாட்டைக் கொண்ட அம்­சங்கள் அர­சி­ய­ல­மைப்பில் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை என்றே கூற வேண்டும்.

பேரி­னத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களை, அவர்கள் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்­றார்கள் என்ற ஒரே கார­ணத்­திற்­காக அவர்­க­ளு­டைய அர­சியல் அதி­கார உரி­மை­களை மேன்­மை­யான நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களே அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதன் கார­ண­மா­கத்தான் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்மை இன மக்கள் நம்­பிக்கை அற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். நம்­பிக்கை கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக உள்­ளார்கள்.

இந்த கால வரை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கச் செயற்­பா­டு­களில் சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அர­சியல் குடி­யியல் நன்மை குறித்து கூடிய கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கப் பணி­களில் அவர்­க­ளையும் பங்­கா­ளி­க­ளாகக் கொள்­ள­வில்லை. அவர்­க­ளு­டைய அபி­லா­சைகள், அர­சியல் நிலைப்­பா­டுகள், அவை பற்­றிய கருத்­துக்­க­ளும்­கூட உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­களில் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

இதற்கும் அப்பால் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­க­ளவர் ஒரு­வரே – அதுவும் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக முடியும் என்ற நியதி எழு­தப்­ப­டாத அதே­நேரம் மாற்­றப்­பட முடி­யாத ஓர் அர­சியல் நிய­தி­யாக நடை­மு­றையில் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அக்­கறை கொள்­ளாத அர­சியல் போக்கு

இத்­த­கைய ஒரு சூழலில் சிறு­பான்மை இனத்­தவர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வரமுடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு­வரே அதுவும் பிர­தான கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்சி அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்றில் ஏதா­வது ஒரு கட்­சியைச் சேர்ந்த ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக முடியும் நடை­முறை யதார்த்தம் இது­கால வரையில் இருந்து வந்­துள்­ளது.

ஆனால் எட்­டா­வது ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான இந்தத் தேர்தில் அந்த நிலை­மையில் ஒரு மாற்றம் ஏற்­பட்டு ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் இடத்தை பொது­ஜன பெர­முன என்ற புதிய கட்சி கைப்­பற்றி கோத்­தா­பாய என்ற வலிமைமிக்க ஒரு­வரை தனது வேட்­பா­ள­ராக நிறுத்தி இருக்­கின்­றது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பதவி தொடர்பில் அந்தக் கட்­சிக்குள் எழுந்த போட்டி, பூசல்கள் கார­ண­மாக அந்­தக்­கட்சி செல்­வாக்­கி­ழந்து போயுள்­ளது.

அதன் முன்னாள் தலை­வ­ரா­கவும் ஜனா­தி­ப­தி­யா­கவும் அர­சியல் அரங்கில் மிகப் பலம்­வாய்ந்த ஒரு­வ­ராகத் திகழ்ந்த மகிந்த ராஜ­பக்ஷவின் தலை­மையில் இந்த பொது­ஜன பெர­முன செயற்­படத் தொடங்கி சிங்­கள மக்­களின் பேரா­த­ரவைப் பெற்­றுள்­ளது. இந்த அர­சியல் செல்­வாக்கு கடந்த உள்ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் முதன்மை நிலையில் வெளிப்­பட்­டி­ருந்­தது.

ஆனாலும் இந்தக் கட்­சியின் வேட்­பா­ள­ரா­கிய கோத்­தபாய ராஜ­பக்ஷவின் இலங்கைக் குடி­யு­ரிமை தொடர்­பி­லான கேள்வி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் பூதா­க­ர­மாக எழுந்து அச்­சு­றுத்தி உள்ள போதிலும் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்­கொள்ள வேண்­டிய தீர்­மா­னத்தில் எந்­த­வித செல்­வாக்­கையும் செலுத்­த­வில்லை. கோத்­தபாய வேட்­பா­ள­ரா­னாலும் சரி வேட்­பா­ள­ராகாவிட்­டா­லும்­சரி தமிழ் மக்கள் தமக்கு சாத­க­மான ஒரு­வரைத் தெரிவு செய்­வதில் சிக்­க­லான நிலை­மைக்கே முகம் கொடுக்க வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர்.

அவ­நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்தும் உத்தி

பேரின அர­சியல் தலை­வர்கள் எவரும் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் நலன்­களில் அக்­கறை கொள்­ளாத ஓர் அர­சியல் போக்கைக் கொண்­டி­ருப்­ப­தனால், அவர்­களில் எவ­ரை­யுமே நம்ப முடி­யாத நிலை­மைக்கே தமிழ்மக்கள் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். விடு­த­லைப்­பு­லி­களை யுத்­தத்தில் மௌனிக்கச் செய்­ததன் பின்னர் இந்த நிலைமை மேலும் மோச­ம­டைந்­துள்­ளது. இதுவே நாட்டின் அர­சியல் செல்­நெ­றி­யாக நிலை­பெற்­றுள்­ளது.

சம்­பந்­த­னு­ட­னான சந்­திப்பு

இந்த நிலையில், ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள வேட்­பா­ளர்­களும், அவர்கள் சார்ந்­துள்ள கட்­சி­களும் சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டிய கடப்­பாட்டைத் தட்­டிக்­க­ழிக்க முடி­யாத பொறுப்­பாகக் கொண்­டி­ருக்­கின்­றனர். இருப்­பினும் அவர்கள் அந்த விட­யத்தில் அக்­கறை அற்­ற­வர்­க­ளா­கவே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதனால் மாறிமாறி ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரி­யா­சனம் ஏறு­கின்ற பேரின அர­சியல் தலை­வர்கள் மீதும், அவர்­களின் கட்­சி­களின் மீதும் தாங்கள் நம்­பிக்கை இழந்­துள்­ளார்கள் என்­பதை இந்தத் தேர்­தலின் மூலம் வெளிப்­ப­டுத்த வேண்­டிய ஒரு நிலை­மைக்குள் தமிழ் மக்கள் இப்­போது தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

அத­ன­டிப்­ப­டையில் தங்­களின் நம்­பிக்­கை­யற்ற நிலைப்­பாட்டை சிங்­கள மக்­க­ளுக்கும் பேரின அர­சியல் கட்­சி­க­ளுக்கும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காகத் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்­பாளர் ஒரு­வரைக் கள­மி­றக்கி அவ­ருக்கே வாக்­க­ளிக்­கின்ற ஒரு தீர்­மா­னத்­திற்கு ஒரு சாரார் ஏற்­க­னவே வந்­துள்­ளார்கள்.

இந்த வகையில் தமிழ்மக்­களும், தமிழ் அர­சியல் கட்­சி­க­ளை ஓர் அணியில் திரட்டி தேர்­மலை எதிர்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் தமிழ்மக்கள் பேர­வையின் முன் முயற்­சியில் சுயா­தீன தமிழ்க்­குழு ஒன்று இறங்­கி­யுள்­ள­தாகத் தெரி­கின்­றது. இந்தக் குழு இது­வி­டயம் தொடர்பில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை நேரில் சந்­தித்துப் பேச்­சுக்கள் நடத்தி பொது வேட்­பா­ள­ராக அவரை நிறுத்­து­வது குறித்தும் பேசப்­பட்­ட­தாகத் தெரி­கின்­றது.

தமிழ்த்­த­ரப்பை இந்தத் தேர்­தல்­காலச் சூழலில் ஓர­ணியில் அர­சியல் ரீதி­யாக ஓர் அணி­யாக ஒன்­றி­ணைப்­பது சிங்­களத் தரப்பைத் தமிழ்த்­த­ரப்­புக்கு எதி­ராக ஒன்­றி­ணை­வ­தற்கு வழி­வ­குத்­து­விடும் என்ற ஆபத்­தான நிலைமை குறித்து சம்­பந்தன் இந்தச் சந்­திப்பின் போது சுயா­தீன தமிழ்க்­கு­ழு­வி­ன­ருக்குச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தாகத் தெரி­கின்­றது.

உத்­த­ர­வா­த­மற்ற பன்­னாட்டு நிலைமை

சம்­பந்தன் எடுத்துக் கூறிய ஒரு நிலை­மை­யுடன், ஜனா­தி­பதி தேர்­தலை முன்­னிட்டு தமிழர் தரப்பின் ஒன்­றி­ணைவு, அடுத்து வரு­கின்ற பொதுத் தேர்­த­லிலும் சிங்­களத் தரப்பு முன்­னெ­டுக்க வேண்­டிய நிலைப்­பாட்டில் செல்­வாக்கு செலுத்த வல்­லது என்­ப­தையும் இங்கு கவ­னத்தில் கொள்ள வேண்டும். அந்த செல்­வாக்கு பொதுத் தேர்­தலில் ஏற்­ப­டுத்தக் கூடிய மாற்­றங்கள் அல்­லது உரு­வா­கப்­போ­கின்ற புதிய அரச தரப்­பி­ன­ரு­டைய ஆட்சிக் கொள்­கைக்­கான தீர்­மா­னத்­திலும் முக்­கி­யத்­துவம் பெறக் கூடும் என்­ப­தையும் மறுக்க முடி­யாது.

அதே­நேரம் இந்தத் தேர்­தலில் அளிக்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­களின் அடிப்­ப­டையில் வெற்­றி­யா­ளரைத் தீர்­மா­னிக்­கின்ற தேர்தல் நடை­ மு­றையில் வெற்றி பெறு­ப­வரைத் தீர்­மா­னிப்­பதில் தமிழ் மக்­களின் வாக்­குகள் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருப்­ப­தனால் எந்த வகை­யிலும் அந்த வாக்­கு­களைப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் தேர்தல் கால உத்­தி­க­ளையும் பேரின அர­சி­யல்­வா­திகள் கைக்­கொள்ளத் தவ­ற­மாட்­டார்கள்.

எனவே வெற்­றி­யா­ளரைத் தீர்­மா­னிக்­கின்ற தமிழ்மக்­களின் வாக்­குகள் அவர்­க­ளு­டைய அர­சியல் நலன்கள் சார்ந்த தேவைக்­காக, தங்­க­ளுக்குப் பயன்­ப­டாத வகையில் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வதை அவர்கள் விரும்­பமாட்டார்கள். இது ஒரு விடயம். தங்கள் மீது நம்­பிக்கை வைக்­காமல் ஒற்­றை­யாட்சி என்ற கோட்­பாட்டை மீறிய வகையில் தனி­வ­ழியில் செல்­வ­தற்­கான ஒரு சமிக்­ஞை­யாக அதனைக் கருதி அவர்கள் அர­சியல் ரீதி­யாகக் கோப­ம­டை­யவும் கூடு;ம்.

உணர்வு நிலை அர­சியல் போக்கைக் கொண்­டுள்ள பேரின அர­சியல் தலை­வர்­களும், அர­சி­யல்­வா­தி­களும் இதற்­காகத் தமிழ் மக்­களைப் பழி­வாங்­கு­வ­தற்கும் முயற்­சிக்­கலாம். ஜேஆர் ஜய­வர்­தன காலத்தில் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் தமிழ் மக்கள் ஓர­ணியில் ஒன்­றி­ணைந்து வாக்­க­ளித்­ததன் பின் விளை­வா­கவே 1981 மற்றும் 1983 ஆம் ஆண்­டு­களில் தமிழ்மக்கள் மீதான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. இந்த வர­லாற்றுப் பாடத்­தையும் இந்தச் சந்­தர்ப்­பத்தில் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

தமிழ்மக்­களின் உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும் அவற்றை அரசு வழங்க வேண்டும் என்­றெல்லாம் பேச்­சுக்­க­ளிலும், பொது அரங்­கு­க­ளிலும் அறிக்­கை­க­ளிலும் ஐநாவும் சர்­வ­தேச நாடு­களும் வலி­யு­றுத்­தலாம். ஆனால் அவற்றை அரசு நிறை­வேற்ற வேண்டும் என்­ப­தற்­காக செயல் வடி­வத்­தி­லான அழுத்­தத்தை அவைகள் இலங்கை மீது இது­வ­ரை­யிலும் பிர­யோ­கித்­த­தில்லை. இனி­மேலும் அது நடக்­குமா என்­ப­தற்கும் உத்­த­ர­வாதம் இல்­லாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

ஒன்­றி­ணை­வார்­களா……?

தமிழ் மக்­களும் தமிழ் அர­சியல் கட்­சி­களும் ஓரணி­யாக ஒன்­றி­ணைய வேண்டும் என்­பதைப் பலரும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்­துள்­ளனர். இந்தப் பத்­தி­க­ளிலும் அதன் அத்­தி­யா­வ­சிய தேவை, அதன் அர­சியல் அவ­சியம் பற்றி பல தட­வைகள் சுட்­டிக்­காட்­டப்­பட்டு வந்­துள்­ளது. அத்­த­கைய ஒன்­றி­ணைவு இல்­லா­விட்டால் ஏற்­படக் கூடிய ஆபத்­துக்கள் குறித்தும் எடுத்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­ததை மறக்க முடி­யாது.

தமிழ்மக்­களும் தமிழ் அர­சியல் கட்­சி­களும் இறுக்­க­மான ஓர் அர­சியல் கட்­ட­மைப்பில் ஒன்­றி­ணை­கின்ற அதே­வேளை, துறைசார் நிபு­ணர்கள், புத்­தி­ஜீ­விகள், சமூக முக்­கி­யஸ்­தர்கள்,  பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய ஒரு வழி­காட்டல் குழு­வொன்றை உரு­வாக்கிச் செயற்­பட வேண்டும் என்­பதும் ஏற்­க­னவே, இங்கு வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

தேர்தல் கால தேவைக்­காக என்­றில்­லாமல் தமிழ்மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான அர­சியல் பய­ணத்தை அர்த்­த­முள்ள வகையில் முன்­னெ­டுப்­ப­தற்கு இந்த ஒன்­றி­ணைவும் வழி­காட்டல் குழுவும் அவ­சியம். ஆனால் இது குறித்து ஆலோ­சிக்­கப்­ப­ட­வு­மில்லை. அதற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாவும் தெரி­ய­வில்லை. ஆனால் தற்­போது ஜனா­தி­பதி தேர்தல் நெருங்கி வரு­கின்ற மிகக் குறு­கி­ய­தொரு காலப்­ப­கு­தியில் அந்த வழி­காட்டல் குழு போன்­றதை ஒத்த சுயா­தீன தமிழ்க்­குழு உரு­வாக்­கப்­பட்டு ஒற்­று­மைக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. காலம் தாழ்த்­திய செயற்­பா­டா­கிய போதிலும், இது பாராட்­டுக்­கு­ரி­யது; ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டி­யது.

அதே­நேரம் அனைத்து தமிழ் அர­சியல் கட்­சிகள் என்­ப­தற்கும் அப்பால் தமிழ்த் ­தே­சி­யத்தைத் தமது அர­சியல் கொள்­கையின் அடி­நா­த­மாகக் கொண்டுள்ள அரசியல் கட்சி களாவது ஓரணியில் ஒன்றிணையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சுயாதீன தமிழ்க்குழு முன்வைத்த யோசனை களைச் செவிமடுத்த சம்பந்தன் அது குறித்து தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும். நானும் யோசிக்கிறேன். நீங்களும் யோசியுங்கள என்றவறாகப் பதிலளித்துள்ளதாகத் தக வல். அத்துடன் இந்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சிக்குள் கலந்தாலோசிக்க வேண்டும். அதற்கும் அப்பால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதையும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரி கின்றது.

அதேநேரம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ரீஎம்கே என்ற தமிழ்மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளுடனும் சுயாதீன தமிழ்க்குழு பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்குப் பயனுள்ளவையாக அமைந்தன என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை.

ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு விரல்விட்டு எண்ணுகின்ற நாட்களே இருக் கின்ற ஒரு குறுகிய கால வேளையில் தமி ழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரைக் களமிறக்குவதற்கான இந்த முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பது கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். அதேவேளை, இந்த முயற்சிக்கு செவிகொடுத்து அரசியல் கட்சிகள் உடனடியாக ஓரணியில் ஒன்றிணைவார்களா என்பதும் கேள்விக்குரியதே.

மொத்தத்தில் இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாட்டின் பிரதான கட்சிகள், தென்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தமிழ்த் தரப்பு அரசியல் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களும்கூட குழப்பமான நிலைமைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த குழப்பமான நிலைமைகளில் இருந்து மீண்டு அனைவரும் எவ்வாறு இந்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பி.மாணிக்­க­வா­சகம்