2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியானதையடுத்து 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள போதிலும் இன்றைய தினம் இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலின் பின்னர் 35 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 35 பேரும் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக இம்முறை 41 வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 16 உறுப்பினர்களும் சுயாதீன வேட்பாளர்களாக 17 பேரும் புதிய கட்சிகளின் சார்பில் எட்டு பேருமாக தமக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ஷ, அநுரகுமார திஸாநாயக்க, றொஹான் பள்ளேவத்த , வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஸ்ரீதுங்க ஜயசூரிய, ஸ்ரீபால அமரசிங்க, சரத் மனமேந்திர, சமரவீர வீரவன்னி , வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, பொல்கம்பல ராலலாகே சமிந்த அநுருத்த , ஏ.எஸ்.பி.லியனகே, கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா, துமிந்த நாகமுவ, கலாநிதி அஜந்தா விஜேசிங்க பெரேரா, சந்திரசேகர ஹேரத் ஹிட்டிஹாமி கோராளலாகே சமன்ஸ்ரீ ஹேரத் , அஷோக வடிகமங்காவ, ஆரியவங்ச திஸாநாயக்க, நம்புநாம நாணயக்கார அக்மீமன பள்ளியங்குருகே வஜிரபானி விஜயஸ்ரீவர்தன, பெதெ கமகே நந்திமித்ர, அப்பரெக்க புஞ்ஞானந்த தேரர், விஜேநாயக்க கங்கானம்கே பியசிறி விஜேநாயக்க, சமல், ஜயந்த ராஜபக்ஷ, அருண டி செய்சா, ஜயந்த லியனகே, சாந்த குமார ஆனந்த வெல்கம, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பத்தரமுல்ல சீலரத்ன தேரர், இல்லியாஸ் ஜத்துரோஸ் மொஹமட், அஜந்த டி சொய்சா, அஹமட் அசான் மொஹமட் அலவி , வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சலாகே சரத் விஜித்தகுமார, வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, பிரியந்த முனிஹத் எதிரிசிங்க, நாமல் ராஜபக்ஷ, எம்.கே.சிவாஜிங்கம், மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லா, குணபால திஸ்ஸகுட்டி ஆராச்சி, கனே ஆரச்சி மஹிபால ஹேரத், சுப்ரமணியம் குணரத்தினம் ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.
இலங்கை வரலாற்றில் இல்லாதவாறு இம்முறை இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான அதாவது 41 பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணங்களை செலுத்தியிருந்த நிலையில் 35 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இரு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவை நிராகரிக்கப்பட்டு 35 வேட்பாளர்களும் இம் முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லையென்பது விசேட அம்சமாகும்.
இந்நிலையில், 67 வருடகால அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வரலாறுகாணாத பின்னடைவை சந்தித்துள்ளது. சுமார் 37 ஆண்டுகளுக்கு பின் ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சி இம்முறை போட்டியிடவில்லை என்பது அதன் பின்னடைவையே காட்டுகின்றது.
கடந்த 1952 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க முதல் மைத்திரிபால சிறிசேன வரை தேர்தல்களில் சுதந்திரக்கட்சி போட்டியிட்டது.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட 35 இறுதி ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் வருமாறு,
சஜித் பிரேமதாச
1967 இல் பிறந்த இவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினுடைய மகனாவார். சென்.தோமஸ் கல்லூரி, ரோயல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் லண்டனில் உள்ள மில்ஹில் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர, உயர்தர பரீட்சைகளை பூர்த்தி செய்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு உறவுகள் குழுவின் கீழ் தென் தஹோட்டாவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்டர் லரிப் பிரஸ்கர் உடன் சேர்ந்து செயன்முறைக் கற்கையைப் பூர்த்தி செய்தவர். 1993 இல் இவரது தந்தை கொலை செய்யப்பட்ட பின்னர் நாடு திரும்பி அரசியலில் ஈடுபட்டார். அம்பாந்தோட்டை ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அம்பாந்தோட்டையிலிருந்து 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 2015 ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சராக பதவியேற்றார்.
கோத்தபாய ராஜபக் ஷ
1949 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர். டீ.ஏ.ராஜபக் ஷவின் புதல்வராவார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் 1983 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கற்றை நெறியில் முதுமாணிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய் தவர். 1992 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தக வல் தொழில்நுட்பத் துறையில் முதுமாணி டிப்ளோமா பட்டம் பெற்றவர். 1971 இல் இலங்கை இராணுவத்தில் ஓர் அதிகாரியா கச் சேர்ந்தார். 1998 இல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். கலிபோர்னியாவிலுள்ள லோயலா சட்டக் கல்லூரியில் முறைமை நிர்வாகியாக பின்பற்றினார். 2005ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010 இல் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான அலுவலக பொறுப்பை ஏற்றார்.
அநுரகுமார திஸாநாயக்க
1968 இல் பிறந்த இவர் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். தபுத்தேகம காமினி ஆரம்ப பாடசாலை, தபுத்தேகம மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். 1995 இல் களனி பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டதாரியாக வெளியேறினார். 1998 இல் ஜே.வி.பி. சார்பாக மாணவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடு பட்டதைத் தொடர்ந்து அரசியலில் பிரவேசித்தார். 1997 இல் சோசலி மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராக நியமனம் பெற்றார். 1998 இல் மத்திய மாகாணத்தில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார். 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றுக்கு தெரிவானார். 2004 இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசில் இணைந்து விவசாய கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பணியாற்றினார். 2008 இல் பாராளுமன்ற குழு தலைவராக நியமனம் பெற்றார். 2010 இல் மீண்டும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார். 2014 பெப்ரவரி 2 ஆம் திகதி இடம்பெற்ற ஜே.வி.பி.யின் 7 ஆவது தேசிய மாநாட்டின் போது கட்சி தலைவராகப் பெயரிடப்பட்டார். 2015 இல் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 2015 – – 2018 பிரதம எதிர்க்கட்சி கொறடாவாக நியமனம் பெற்றார்.
றொஹான் பள்ளேவத்த
52 வயதான இவர் ஜாதிக சங்வர்த்தன பெரமுன வைச் சேர்ந்தவர். கடுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார். ஸ்ரீ ஜயவர்த்தனபு ரவில் பட்டம் பெற்ற இவர் ஒரு சட்டத்தரணியாவார். பிரித்தானியாவின் வோல்ட்ன் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டதைப் பெற்றுக் கொண்டார். தற்போது லங்கா ஹானஸ் தனியார் லிமிட்டட்டின் நிறைவேற்று தலைவராவார். இது வாகன உதிரிப்பாக தயாரிப்பு நிறுவனமாகும். 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமைத்துவத்தை வகித்து வருகிறார்.
வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்னாண்டோ
1944 ஆம் ஆண்டு பிறந்த இவர் சுயேச்சை வேட்பாளராவார். வென்னப்புவ ஜோசப் கல்லூரி, புனித ஜோசப்வாஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். 1987 இல் சோசலிச ஐக்கிய முன்னணி சார்பில் வடமேல் மாகாணசபை உறுப்பினாகத் தெரிவானார். ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த பின்னர் கட்சி மாறி சுதந்திர கட்சியுடன் இணைந்தார். 2000 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் மற்றும் மீனபிடி சமூக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சராகக் கடமையாற்றினார். 2004 இல் மீன்பிடி நீரியல் வள மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகக் கடமையாற்றினார்.
ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க
1964 ஆம் ஆண்டு பிறந்த இவர் தேசிய மக்கள் இயக் கத்தின் சார்பில் போட்டியிடுகிறார். இவர் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். அமெரிக்காவில் இராணுவ கற்கைநெறியில் தனது இளமாணிப் பட்டதைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் விஞ்ஞானப் பட்டதாரியாவார். இலங்கை இராணுவத்தில் 1981 ஒக்டோபர் 16 முதல் இணைந்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு இராணுவ தளபதியாக நியமனம் பெற்றார்.
ஸ்ரீதுங்க ஜயசூரிய
1947 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஐக்கிய சோசலிச கட்சியைச் சேர்ந்தவர். தனது உயர் கல்வியை காலி – விட்சமன் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். 1964 முதல் லங்கா சமசமாஜக் கட்சியின் உறுப்பினராகி அரசியலில் பிரவேசித்தார். 1975 இல் இடம்பெற்ற இடைத்தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்தனவை எதிர்த்து போட்டியிட்டார். 1979 இல் நவ சமசமாஜக் கட்சியின் உருவாக்கத்தில் தனது பங்களிப்பை வழங்கினார். 1997 இல் ஐக்கிய சோசலிச கட்சி தோற்றம் பெற மூல கர்த்தாவாக விளங்கினார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். சோசலிச கட்சியின் தற்போதைய தலைவரும் செயலாளரும் ஆவார்.
ஸ்ரீபால அமரசிங்க
சுயேச்சை வேட்பாளரான இவர் மாலபேயிலுள்ள பூமிரிய மத்திய கல்லூரி மற்றும் இராகுல கல்லூரியின் பழைய மாணவராவார். ஸ்ரீஜயவர்தனபுர பல் கலைக்கழகத்தில் முகாமைத்துவ துறை யில் தனது பட்டத்தைப் பெற்றுக் கொண் டார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் பட்டைய கணக்காளராக கடமையாற்றினார். 1975 இல் ஜே.வி.பியுடன் இணைந்தார். உள்ளக நிறுவன ஊழியர் ஒன்றியத்தின் செயலாளராகக் கடமையாற்றினார். கம்பஹா மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
சரத் மனமேந்திர
இவர் நவ சிங்கள உறுமயைச் சேர்ந்தவர். அம்பு வில் இக்கட்சியின் சின்னமாகும். கொழும்பு இசிப்பத்தான கல்லூரியின் பழைய மாணவராவார். 1970 இல் அரசியலுக்குள் பிரவேசித்தார். 1980 இல் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பாளராகச் செயற்பட்டார். 2006 இல் நவ சிங்கள உறுமய தோற்றத்துக்கு தனது பங்களிப்பை வழங்கி பியகம தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராக செயற்பட்டார். 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
சமரவீர வீரவன்னி
1943 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு சுயேச்சை வேட்பாளராவார். பண்டார வளை புனித ஜோசப் கல்லூரி, ஹாலியெல ஸ்ரீசுதர்மவாச பிரிவினாவின் பழைய மாணவராவார். வியலுவ தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1970ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 இல் பிரதி கல்வி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 இல் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகப் பெயரிடப்பட்டார். 1999 ஏப்ரல் முதல் 2001 ஒக்டோபர் வரை ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்தார்.
பொல்கம்பல ராலலாகே சமிந்த அநுருத்த
1972 ஆம் ஆண்டு பிறந்த இவர் சுயேச்சை வேட்பாளராவார். ருவன்வெல மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். ஜே.வி.பி சார்பில் சப்ரகமுவ மாகாண சபைக்கு 2000 ஆம் ஆண்டு உறுப்பினராகத் தெரிவானார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 2004 இல் பாராளுமன்றத்திற்கு தெரிவா னார். 2015 இல் சுயேச்சையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
ஏ.எஸ்.பி.லியனகே
இலங்கை தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர். கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஏ.எஸ்.பி. என பலராலும் அறியப்பட்டார். ஒரு வர்த்தகரான இவர் 1989 இல் ஏ.எஸ்.பி குழுமத்தை நிறுவினார். தனியார் நிறுவனமான இதன் தலைவராகவும் நிர்வாகப் பணிப்பாளராகவும் செயற்பட்டார். கட்டார் மற்றும் நைஜீரியாவுக்கு இலங்கையின் தூதுவராகச் செயற்பட்டார். 2010, 2015 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா
1960 இல் பிறந்த இவர் சுயேச்சை வேட்பாளராவார். கொழும்பு – லும்பினி கல்லூரியின் பழைய மாணவராவார். திரை மற்றும் தொலைக்காட்சி நிறுவன டிப்ளோமா சான்றிதழைப் பெற்றவராவார். கடுவல பிரதேசசபைக்கு 1991 இல் தெரிவான இவர் 1997 இல் அதன் எதிர்க்கட்சி தலைவரானார். 2000 ஆம் ஆண்டில் மேல் மாகாண சபை உறுப்பினரானார். 2013 ஆம் ஆண்டு சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்ட தைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
துமிந்த நாகமுவ
முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த இவர் 1980 ஆம் ஆண்டு பிறந்தார். ஒலபொடுவ மகா வித்தியாலயம், இசிப்பத்தான மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். தெல்தெனிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு தெரிவான இவர் பல்கலைக்கழகத்தினால் வெளியேற்றப்பட்டதினால் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. 2002 இல் ஜே.வி.பியுடன் இணைந்து கொண்டார். 2004 –2008 வரை உள்ளக பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகித்தார். ஜே.வி.பி சார்பில் 2009 இல் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டார். 2015 ஆம் ஆண்டு முன்னிலை சோசலிச கட்சியில் இணைந்து கொண்டார். 2015 இல் இடதுசாரி கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். 2017 முதல் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளராக பணியாற்றி வருகிறார்.
கலாநிதி அஜந்தா விஜேசிங்க பெரேரா
இலங்கை சோசலிச கட்சியைச் சேர்ந்தவர். 1957 இல் பிறந்தவர். விசாகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் சென்னை குட்செபட் கல்லூரியின் பழைய மாணவராவார். லண்டன் ஹரோ கல்லூரியில் உயர்தர கல்வியைப் பெற்றார். லண்டன் சீபீல்ட் பல்கலைக்கழகத்தில் இளமாணிப்பட்டம் பெற்ற இவர் ஜேர்மன் முனிஜ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டத்தை 1987 இல் பெற்றுக்கொண்டார். ஜேர்மனி முனிஜ் லுட்விக் மெக்ஸ்மினன் பல்கலைக் கழகத்தில் சூழலியல் சம்பந்தமாக 1992 இல் கலாநிதி பட்டம் பெற்றார். கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சுற்றுசூழல் அமைச்சுக்கு ஆலோசகராகவும் பதவி வகித்துள்ளார்.
சந்திரசேகர ஹேரத் ஹிட்டிஹாமி கோராளலாகே சமன்ஸ்ரீ ஹேரத்
1963 ஆம் ஆண்டு பிறந்த இவர் சுயேச்சை வேட்பாளராவார். சிலாபம், ஹெலகம அடிபால வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். புத்தளம் மாவட்ட ஜே.வி.பி.யின் முன்னாள் பிரதம அமைப்பாளராவார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் போட்டியிட்டு 2004 இல் தெரிவானார்.
அஷோக வடிகமங்காவ
சுயேச்சை வேட்பாளரான இவர் 1952 இல் பிறந்தார். ஆனமடுவ மகா வித்தியாலயம், பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் உயர்தர கற்றையின் பின்னர் சட்ட கல்லூரிக்கு பிரவேசித்தார். ஐ.தே.க. சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 1989 இல் காணி இராஜாங்க அமைச்சரான இவர் 1990 இல் காணி அமைச்சராகச் செயற்பட்டார். 2018 இல் சு.க சார்பில் புத்தளம் மாவட்ட அமைப்பளராக நியமனம் பெற்றார்.
ஆரியவங்ச திஸாநாயக்க
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர். அவிசாவளை சீதாவக்க மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மின்னியல் மற்றும் தொலைத்தொடர்பு டிப்ளோமா பட்டம் பெற்றவர். இங்கிலாந்து கென்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி முதுமாணிப் பட்டம் பயின்று வருகிறார். 2004 இல் இலங்கை டெலிகொம்மின் பொறியியலாளராகக் கடமையாற்றியுள்ளார். 1985 இல் அரசியலில் பிரவேசித்தார். சு.க சார்பில் 1989 இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 1999 இல் மத்திய மாகாணசபை உறுப்பினரானார்.
நம்புநாம நாணயக்கார அக்மீமன பள்ளியங்குருகே வஜிரபானி விஜயஸ்ரீவர்தன
சோசலிச சமவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர். 66 வயதான இவர் மாத்தறை இராகுல கல்லூரியின் பழைய மாணவராவார். களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியான இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராவார். சோசலிச சமவுடமைக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினராவார். ஆசிரியர் போராட்டங்களின் போது பலராலும் அறியப்பட்டவர். சினிமாத்துறையிலும் இவர் பிரபல்யமானவர்.
பெத்தெ கமகே நந்திமித்ர
நவ சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த இவர் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். கலுபோவில மகா வித்தியாலயம், கெஸ்பாவ மகேந்திர ஸ்ரீசுதர்ஷன வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். 1989 இல் நவ சமாஜக் கட்சியில் இணைந்து கொண்டார்.
அப்பரெக்கே புஞ்ஞானந்த தேரர்
1955 இல் பிறந்த இவர் சுயேச்சை வேட்பாளராவார். அபேரெக்க மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். 1974 இல் துறவறம் பூண்டார். மீரிகம பமுனுவத்த மொரகஸ்வெவ ஸ்ரீ விவேகராம விகாரையின் பிரதம தேரராவார். ஜாதிக ஹெல உறுமய சார்பில் 2004 பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
விஜேநாயக்க கங்கானம்கே பியசிறி விஜேநாயக்க
1964 இல் பிறந்த இவர் சுயேச்சை வேட்பாளராவார். களனி பல்கலைக்கழக பட்டதாரியாவார். 1977 இல் ஹொரண பிரதேச சபை உறுப்பினராவார். 1999 –2004 மேல் மாகாணசபை உறுப்பினராவார். 2000 ஆம் ஆண்டிலும் 2001 ஆம் ஆண்டிலும் களுத்துறை மாவட்ட பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். 2001 இல் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
அருண டி சொய்சா
ஜனநாயக தேசிய முன்னணியைச் சேர்ந்த இவர் 1962 இல் பிறந்தார். பெலப்பிட்டிய ரெவத்த மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் 1982 இல் கணித ஆசிரியராக அங்கு பணிபுரிந்தார். 1989 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு 1992 இல் விடுதலை செய்யப்பட்டார். 1994 இல் காலி மாவட்ட ஜே.வி.பி. தலைவராகச் செயற்பட்டார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
ஜயந்த லியனகே
சிங்கள தீப ஜாதிக பெரமுனவைச் சேர்ந்தவர். 1957 இல் பிறந்தார். குருணாகல் மலியதேவ கல்லூரி, கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். லண்டன் கிங்ஸ்டன் கல்லூரி மாணவராவார். 1992 முதல் மின்னியல் பொறியியலாளராக கடமையாற்றி வருகிறார். பூமிபுத்திர கட்சியுடன் 1997 இல் இணைந்து கொண்டார். குருணாகல் மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டார். 2000 ஆம் ஆண்டில் சிஹல உறுமய சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க
65 வயதான இவர் சுயே ச்சை வேட்பாளராவார். ஆங்கி மொழியில் ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத் தில் கலாநிதிப்பட்டம் பெற் றார். 80 களில் அரசியலில் பிரவேசித்தார். மாகாண சபைத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பாக 1988 இல் போட்டியிட்டார். 1999 ஜனாதிபதித் தேர்தல் 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகமாக 2007 இல் நியமனம் பெற்றார். 2010 இல் பாராளுமன்றம் சென்றார்.
பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
ஜனசத பெரமுனவைச் சேர்ந்தவராவர். 1968 இல் பிறந்தார். கதிர்காமம் காவன் திஸ்ஸபுர தம்ம விஜய விகாரையின் பிரதம தேரராவார். 2006 ஆம் ஆண்டில் அரசியலில் பிரவேசித்த இவர் 2008 இல் ஜனசத பெரமுனவை தாபித்து அதன் தலைவரானார். 2010, 2015 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
இல்லியாஸ் ஐத்துரோஸ் மொஹமட்
1945 ஆம் ஆண்டு பிறந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 2015 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
அஜந்த டி சொய்சா
ருஹூணு ஜனதா பெரமுன கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சியின் ஸ்தாபராகவும் உள்ளார்.
அஹமட் அசான் மொஹமட் அலவி
இவர் சுயேட்சை வேட்பாளர்
வெலேரா கீர்த்தி ரத்தின முதியன்சேலாகே சரத் விஜித குமார
சுயேச்சை வேட்பாளரான இவர் கிந் தேல்பிட்டிய வெல்மில்ல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா
ஐக்கிய சோசலிச கட்சி சார்பில் இவர் போட்டியிடுகிறார்.
பிரியந்த முனிஹத் எதிரிசிங்க
கண்டியைச் சேர்ந்த இவர் அனைவரும் மக்கள் அனைவரும் அரசர் என்ற அமைப் பின் கீழ் போட்டியிடுகிறார்.
நாமல் ராஜபக்ஷ
தெஹிவளையை சேர்ந்த இவர் தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடு கின்றார்.
எம்.கே.சிவாஜிலிங்கம்
1957 இல் பிறந்த இவர் இம்முறைத் தேர்தலில் சுயே ச்சையாகக் களமிறங்கவுள் ளார். 2001 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் வேட் பாளராக யாழ்ப்பாண மாவ ட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதற் தடவையாக பாராளுமன்றம் சென் றார். 2004 இல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 இல் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மஹ்மூத் லெவ்வை ஆலீம் மொஹமட் ஹிஸ்புல்லாஹ்
1963 ஆம் ஆண்டில் பிறந்த இவர், 2010 பொதுத் தேர்த லில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரி வானார். பின்னர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாராளு மன்றத்துக்கு தெரிவானார். 2018 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி யேற்றார். இவ் வருடம் சுயேச்சையாக தேர் தலில் போட்டியிடுகின்றார்.
சுப்ரமணியம் குணரத்தினம்
எமது தேசிய முன்னணி சார்பில் போட்டி யிடும் இவர் கோட்டே பிரதேசத்தை சேர்ந்தவராவார்.