இம்மாதம் 16 ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் யார்? யார்? என்பதை தேர்தல் ஆணையாளர் உங்களுக்கு தபால் மூலம் தெரிவித்திருப்பார். ஆகவே தேர்தல் தினத்தன்று நீங்கள் உங்களுக்கு உரித்தான அவ் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை எடுத்துக் கொண்டு அந்த அட்டையில் நீங்கள் எங்கே வாக்களிக்கச் செல்லவேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும். வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும்போது கட்டாயம் உங்களது அறிமுகத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டும். 1. தேசிய அடையாள அட்டை ...
Read More »கொட்டுமுரசு
வாக்குரிமையை சமூக நலன்கருதிப் பயன்படுத்துவோம்!
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவுள்ளவர் நிச்சயம் ஒரு பௌத்த சிங்கள வராகவேயிருப்பார். அதில் மாற்றமிருக்காது. குறித்த தேர்தலில் பலர் போட்டி யிட்டாலும் இருவருக்கிடையேயாகவே போட்டி நிலவுகின்றது. நாட்டின் சிறுபான்மையினத்தவரெவரும் தெரிவாகும் வாய்ப்பு அற்றபோது சிறுபான்மையினத்தவரான நாம் ஏன் இத்தேர்தலில் அக்கறை செலுத்தவேண்டும் என்ற வினா எழலாம். குறித்த ஜனாதிபதிப் பதவி நாட்டைப் பொறுத்தவரை சக்தி வாய்ந்தது. சகல சமூகத்தினரையும் அணைத்து, இணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ...
Read More »சீனா – இந்தியாவிற்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்குண்டுள்ள யாழ்ப்பாணம்
நிக்கேய் ஏசியன் ரிவியு தமிழில் ரஜீபன் கொழும்பிலிருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பூகோள அரசியல் அதிகார போட்டியில் இலங்கையின் முன்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி சிக்குப்பட்டுள்ளது. ஒக்டோபர் 17 ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் திறக்கப்பட்டமை ,ஜனாதிபதி தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான ஒரு முயற்சியே என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தேர்தல் கொழும்பிற்கும் அதன் இரு கொடையாளர்களிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. நவம்பர் 16 ...
Read More »தீர்க்கமில்லாத தீர்மானங்கள் !
இழுத்தடிப்பு நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றன. தனித்தனி அறிவிப்புக்களாகவே இவைகள் வெளிவந்துள்ளன. ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டு, மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என்று கூறியிருந்தது. தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவளிப்பது என்று உறுதி யாகத் தீர்மானித்து, ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. ஆனாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சி என்ற வகையில் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளுடனும், தமிழரசுக் கட்சி கலந்தாலோசித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவு என்ன என்பது அறிவிக்கப்படும் என்றும், அந்தப் பொறுப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய ஆர்.சம்பந்தனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ...
Read More »இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மைச் சமூகங்களும்!
இலங்கை தமிழரசு கட்சியிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவையடுத்து சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. சில தமிழ் அரசியல்வாதிகள் பரிந்துரைப்பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலையாக இருந்துகொண்டு தமிழ் மக்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் அல்லது தேர்தலில் பங்கேற்காமல் விலகியிருக்கலாம் என்று ஆலோசனை கூறக்கூடிய சாத்தியப்பாடு முனனர் இருந்தது. காணாமல்போனோரைக் கண்டறிவதிலும் குடிமக்களின் காணிகளை திருப்பிக்கையளிப்பதிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கி நகர்வதிலும் முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து தமிழச்சமூகம் கடுமையாக கோபமடைந்திருக்கிறது.தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து ...
Read More »இலங்கை வன்முறையை எதிர்கொள்ள தயாராகின்றது!
பிலிப்ஸ்சேர்வெல் தி டைம்ஸ்- யுகே தமிழில் ரஜீபன் இலங்கை ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் கொழும்பின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் ஆதரவாளர்கள் கோத்தபாய ராஜபக்சவை உற்சாகத்துடன் வரவேற்றனர், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் வாக்குசீட்டில் உள்ள அதேவேளை பிரச்சாரத்தில் இன்னொரு ராஜபக்ச ஆதிக்கம் செலுத்துகின்றார். கோத்தாபய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த நாட்டை மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஒரு தசாப்த காலமாக ஆட்சி செய்த பின்னர் நான்கு வருடத்திற்கு முன்னர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். தற்போது ராஜபக்சாக்கள் மீள் எழுச்சி பெறும் நிலையில் உள்ளனர். ...
Read More »சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியாளரை தீர்மானிக்கும்!
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் சூடுபிடித்துள்ளன. வெற்றி பெறும் வேட்பாளர்கள் என்ற நம்பகத் தன்மையைக் கொண்டவர்களான சஜித் பிரேமதாஸவினதும், கோத்தாபய ராஜபக் ஷவினதும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பெரும் சனத்திரள் காணப்படுகிறது. இதனால், எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று உறுதி கூற முடியாதுள்ளது. ஆயினும், சிங்களப் பிரதேசங்களில் மேற்படி இரு வேட்பாளர்களினதும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் அடிப்படையில் பெரும்பாலும் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் ஏறத்தாழ சமமாகவே இருக்கும் என புரிந்து கொள்ளக் ...
Read More »யாழ்ப்பாணத்தில் தேர்தல் – இரு பிசாசுகள் மத்தியிலான மோதல்!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களை எதிர்கொண்டாலும் வாக்காளர்களின் ஆர்வம் கோத்தாபய ராஜபக்சவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலானதாக காணப்படுகின்றது. வேடிக்கையான விதத்தில் பலர் மேற்குறிப்பிட்ட இருவரையும் தீயசக்திகளின் பட்டங்களை சூட்டியே குறிப்பிடுகின்றனர். கோத்தாபய ராஜபக்ச அச்சம்தரும் பேய் எனவும் சஜித்பிரேமதாச வெறுக்கிற பேய் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். வாக்காளர்கள் எந்த பேய் குறைந்தளவு ஆபத்தானது- ஜனாதிபதியாக அவர்கள் தெரிவு செய்வதற்கு சிறந்தது என தங்களிற்குள் பேசிக்கொள்கின்றனர். பல வழிகளில் குடாநாட்டில் அவர்கள் பிசாசிற்கும் ஆழமான பாக்குநீரிணைக்கும் அல்லது மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் சிக்குண்டுள்ளனர். ...
Read More »கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது இனவாதிகளிற்கு புத்துயிர்!
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது 2015 இன்பின்னர் செயலற்று காணப்பட்ட தேசிய வாதிகளிற்கும் இனவாதிகளிற்கும் புத்துயுரை வழங்கியுள்ளது-.இந்த சக்திகள் தற்போது உரத்துக்குரல்; எழுப்புபவர்களாகவும் மிரட்டல் அச்சுறுத்தல் விடுப்பவர்களாகவும்மாறிவருகின்றனர் என காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகெடாவின் மனைவி சந்தியா எக்னலிகொட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தமிழில் – அ. ரஜீபன் 1கேள்வி- இலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்களில் நீங்கள் எப்படி உங்களை இணைத்துக்கொண்டீர்கள் என்பது குறித்தும் தெரிவிக்க முடியுமா? பதில்- ...
Read More »நல்லிணக்கத்தை கொண்டுவருவேன் என்று உறுதி கூற வேட்பளார் எவருமில்லை !
இதுவரை அளிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார உறுதி மொழிகளை கணக்கிட்டுப் பார்த்தால் இத்தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளே பெருமளவினதாக உள்ளன. ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களுமே ஏனைய வேட்பாளர்களை விட அதிகமான உறுதி மொழிகளை வாக்காளர்களிடம் வழங்க உறுதி கொண்டுள்ளமையினை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்கும் போது தெரிய வருகிறது. ஒரு வேட்பாளர் நெல் உற்பத்திக்கு தேவையான பசளைகளை இலவசமாக தருவேன் என்றால் இன்னொருவரோ அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்குமே இலவசமான பசளையை நான் பதவிக்கு வந்தால் தருவேன் என்கிறார். தொழிலாளர் வகுப்பினரது வேதனங்களை நான் அதிகரிப்பேன் என்று ...
Read More »