உலகின் மிகப்பெரிய மக்கள் புலம்பெயர்தலை இரத்தமும் சதையுமாக தன் படைப்புகளில் படைத்த எழுத்தாளன் மன்டோ. ஓர் அரசியல்வாதியின் வாழ்க்கையை, விளையாட்டுவீரரின் வாழ்க்கையை, நடிகரின் வாழ்க்கையை `பயோபிக்’ திரைப்படமாக மாற்றுவதைவிட எழுத்தாளனின் வாழ்க்கையை சினிமாவாக மாற்றுவது சவாலானது. சினிமாவுக்குப் பொருந்தும் மற்ற துறைகளின் சாதனையாளர்களின் வாழ்க்கை, எழுத்தாளனுக்குப் பொருந்தாது. எழுத்தாளனைப் பாதிக்கும் நிகழ்வுகளையும், அவை வார்த்தைகளாக உயிர் பெறும் நேரங்களையும் எந்த கேமராவாலும் பதிவுசெய்ய முடியாது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்து 70 ஆண்டுகளைக் கடந்தும், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை தேசப்பற்றின் ...
Read More »கொட்டுமுரசு
இந்தியாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்!
வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்ரெக் இப்போது, சர்வதேச அரங்கில் பலம்பெற்று வரும், பிராந்திய நாடுகளின் மற்றொரு கூட்டமைப்பாக மாறத் தொடங்கியிருக்கிறது. இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாக அது பெரியளவில் இயங்கவில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்டது. இதற்குக் காரணம், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தோன்றிய பிரச்சினை. அதுவரை தெற்காசியப் பிராந்தியத்தின் வலுவான பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பாக சார்க் அமைப்புத் தான் இருந்தது. 2016ஆம் ஆண்டு சார்க் மாநாடு ...
Read More »நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை!
திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமைகோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமைகோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும்பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒருவிளக்கம் தரப்பட்டது. அதுபோலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொறுப்பெடுக்க முற்பட்டது சர்ச்சையை ...
Read More »மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா?
முன்னாள் அரச தலைவர்என்ற மதிப்புடன் மகிந்தராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று தலைமை அமைச்சர் மோடி, முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் முக்கி யஸ்தர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் இன்றை சூழ்நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கி யத்துவம் பெறுகின்றது. சுமார் 10 ஆண்டுகாலம் அரச தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமை மகிந்தவுக்கு உள்ளது. அவர் மூன்றாவது தடவையும் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியபோதிலும் ஆட்சிக்கு வருவதில் உள்ள ஆர்வத்தை இன்னமும் கொண்டிருக்கிறார். இதனால் புதிய கட்சியொன்றை அமைத்ததுடன் வேறு சிலரின் ஆதரவையும் பெற்று ...
Read More »ஒரு காலம் விடைபெற்றுக்கொண்டது!
புரட்சிகரக் கம்யூனிஸ்ட் போராளியின் வாழ்க்கைத் துணைவராகி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தலைமறைவு வாழ்க்கையின் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் முகங்கொடுத்து, பிடிவாதம் மிக்க கணவரிடமிருந்து தனிமைப்பட்டு, மகனையும் மகளையும் தன் காலத்திலேயே பறிகொடுத்து, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து பெற்ற இனிப்பும் கசப்பும் கலந்த அனுபவங்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் மூதாட்டி கோட்டேஸ்வரம்மா தமது நூறாவது வயதில் காலமாகிவிட்டார். ஒரு காலம் விடைபெற்றுக்கொண்டது. பேரனுபவங்கள் நிறைந்த வாழ்க்கை கோட்டேஸ்வரம்மாவுடையது. நான்கு அல்லது ஐந்து வயதாகியிருந்தபோதே, குழந்தைத் திருமணம் செய்யப்பட்டு, பருவம் எய்துவதற்கு முன்பே கணவனை இழந்தவர். ...
Read More »மறுக்கப்படும் உரிமைகள் – பி.மாணிக்கவாசகம்
மொழியுரிமையும், காணி உரிமையும் மறுக்கப்படுவது, இனப்பிரச்சினையின் அடிநாதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் ஆளும் தரப்பினரால் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே இனப்பிரச்சினை உருவாகியது. உரிமைகள் மறுக்கப்படுவதைத் தட்டிக் கேட்டும் பலன் கிடைக்காத காரணத்தினாலேயே போராட்டங்கள் தலையெடுத்தன. உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் பல்வேறு வழிகளில் திசைதிருப்பப்பட்டு, அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. அதிகார வலுவுடன் கூடிய சட்;ட ரீதியான அடக்குமுறைகள் ஒருபக்கமாகவும், குழுக்களின் ஊடாக வன்முறைகளைப் பயன்படுத்தி மறைமுகமான அச்சுறுத்தல்களுடன் கூடிய அடக்குமுறைகள் மற்றுமொரு பக்கமாகவும் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு ...
Read More »விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்!
தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன. சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் நின்றுகொண்டுதான், ...
Read More »தமிழ் மக்களை கருவறுக்கும் மகாவலி அபிவிருத்தி!
ஓர் இனத்திலுள்ள மக்களை அழிப்பது மட்டும் இன அழிப்பன்று. அம்மக்களை இனமாகக்காட்டும் கூறுகளை அழிப்பதும் இனவழிப்பே. தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்களவர்களை குடியேற்றி தமிழர் பெரும்பான்மையை சீரழிக்க தென்னிலங்கை அரசாங்கம் காலத்திற்குக் காலம் செயற்பட்டுவருகின்றது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவினால் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியான அம்பாறையில் கல்லோயாவை மறித்த அணை கட்டி அதன் ஊடாக 40000 ஏக்கர் விவசாயக் காணிகள் உருவாக்கப்பட்டனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் அதிகமான சிங்கள் மக்கள் குடியேற்றப்பட்டனர். ...
Read More »அண்ணா புரிந்த அரசியல் சாகசம்!
தென்னிந்திய நலச் சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என வெகுமக்களுக்கு எதிராக அடர்த்தியான தத்துவச் செறிவைக் கொண்ட இயக்கங்களின் வழியாகத் தன்னை வார்த்துக் கொண்டவர் அண்ணா. ஆனால், வெகுமக்களின் உளவியலில் தவிர்க்க முடியாத பேரியக்கமாக இன்று வரை வேரூன்றிப் படர்ந்திருக்கும் திமுக என்ற கட்சியைத் தொடங்கிய இடத்தில்தான், அண்ணா என்ற அரசியல் ஆளுமை தமிழகம் பயணிக்க வேண்டிய எதிர்காலத் திக்கைச் சுட்டிக்காட்டும் பேருருவாக வசீகரம் பெற்று எழுந்து நிற்கிறது. தந்தையின் பாதையிலிருந்து விலகாத தனயனாகவே தனது அரசியலின் அடுத்த கட்டத்தை அவர் தொடர்ந்தாலும், ...
Read More »விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்!
யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் ...
Read More »