செய்திமுரசு

கராத்தே யூரோப்பியன் சம்பியன் 2016ம் ஆண்டுக்கான போட்டி ஈழத்து சிறுமி இரண்டாம் இடம்

கராத்தே யூரோப்பியன் சம்பியன் 2016ம் ஆண்டுக்கான போட்டி இத்தாலி நாட்டில் 11/10/2016 தொடக்கம் 16/10/2016 வரை நடைபெற்றது. பத்து வயதுப் பிரிவில் காட்டா போட்டியில் ஈழத்து சிறுமி ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார். இலண்டனில் வசிக்கும் சிவகுமார் அகல்யா என்பவர் ஆவார். சிறுமியை எமது இணையம் தொடர்பு கொண்டபோது தனக்கு கற்பித்த ஆசான்களாலும், பெற்றோர்களாலும் தனது விடாமுயற்சியான பயிற்சியாலும் கிடைத்த வெற்றியாக கூறியுள்ளார். இவருக்கு எமது இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Read More »

அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டிற்கான நிரந்தர குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள்

அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டிற்கான நிரந்தர குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வரவேற்றுள்ளது. குறித்த நிகழ்வுக்கான ஆன்லைன் பதிவானது இம்மாதம் 4ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. குறிப்பிட்ட நிகழ்வில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களை நிரந்தர குடியுரிமைக்கான நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இந்த ஆண்டு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களை அடுத்த ஆண்டு குறித்த நாளில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தெரிவாகும் விண்ணப்பத்தாரர்களுக்கு 2018ஆம் ஆண்டு முதல் நிரந்த ...

Read More »

ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். ஊடகவியலாளர் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளில் நடாத்தப்படவுள்ள இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தினை யாழ்.ஊடக அமையம் ஏற்பாடு செய்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள்கள் தொடர்பில் உண்மை நிலையினை வெளிக் கொண்டுவரும் வகையில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதம் இன்றி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். சகல ஊடகவியலாளர்களும் தமது பணிகளை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் நிற வெறி!!!

20 வயது இளம்பெண்ணான ஜோசி அஜாக், போரின் காரணமாக 2004 ஆம் ஆண்டு சூடானிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அகதியாக தஞ்சம் புகுந்தவர். தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் ஜோசி அஜாக், குவின்ஸ்லாண்டில் உள்ள ஒரு காபி ஷாப்பில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் அங்கு காபி குடிக்க வந்த வெள்ளையின பெண்ணிடம் ஜோசி அவரின் தேவை குறித்து கேட்க, அவரோ வெள்ளையின பெண்ணை அனுப்பும்படி கேட்டுள்ளார். இது குறித்து அவுஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள ஜோசி, “அப்படி அந்த பெண் சொன்னதும் ...

Read More »

வரிஏற்புச் செய்து பலகோடி பெறுமதியான வாகனக்கொள்வனவு

தீர்வை வரி இன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்த 66 பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்ரசுக் கட்சியின் தலைவரான சேனாதிராஜா உள்ளிட்ட உறுப்பிர்களே தீர்வை வரி இன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்தவர்களின் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். இந்தப் பட்டியல் வெளியிடப்படும் முன்பதாக சில மாதங்களிற்கு முன்பதாக தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வியாபாரியுமான ஒருவர் சுமார் 1750 ரூபாவினை மட்டும் வரிப்பணமாகச் ...

Read More »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி

கடந்த 2014-ம் ஆண்டு பந்து தாக்கியதில் மரணம் அடைந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த சாட்சி விசாரணையில் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய போது பந்து தாக்கியதில் மரணம் அடைந்தார். தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கிய போது, நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பயங்கரமான பவுன்சர் பந்து அவரை ஒரேயடியாக சாய்த்து ...

Read More »

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹினின் கண்டுபிடிப்பு

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹின், உருளைக் கிழங்குகளில் இருந்து பாலாடைக்கட்டியை உருவாக்கியிருக்கிறார். பொட்டேடோ மேஜிக் கம்பெனியின் நிறுவனரான ஆண்ட்ரூ டைஹின், 12 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். “சீஸ், பொட்டேடோவை இணைத்து சாட்டோ என்று பெயரிட்டிருக்கிறேன். பாலாடைக்கட்டியைப் போலவே இருக்கும், உருகவும் செய்யும். இதில் வேறு எந்த ரசாயனங்களும் சேர்க்கவில்லை. உருளைக்கிழங்கை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தி, சாட்டோவை உருவாக்கியிருக்கிறோம். பாலாடைக் கட்டியில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்யலாம். சாட்டோவை வைத்து பாலாடைக்கட்டியாகவும் பாலாகவும் பயன்படுத்தலாம். ஐஸ்க்ரீம்களில் சேர்க்கலாம். ...

Read More »

சிறீலங்கா அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது

அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் நிகழ்த்திய உரையில் இருந்து இதனை மக்கள் மிகத் தெளிவாக புரிந்துகொண்டிருப்பார்கள் என, அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை கூட்டு எதிர்க்கட்சினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த அரசு மீது தற்போது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

Read More »

ஈழத் தமிழன் அவுஸ்திரேலிய இராணுவத்தில் மேஜர் தரத்திற்கு தரமுயர்ந்தார்

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தில் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி

அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் ஐ.எஸ். அமைப்பின் சார்பில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி செய்து 2 சிறுவர்களை தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினர் நேற்று(13) கைது செய்தனர். ஈராக். சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி மூளை சலவை செய்து சிறுவர்களையும் தங்களது இயக்கத்தில் சேர்த்து, தாக்குதல்களில் ஈடுபடுத்துகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஐ.எஸ். அமைப்பின் சார்பில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி செய்து, 16 வயதே ஆன ...

Read More »