20 வயது இளம்பெண்ணான ஜோசி அஜாக், போரின் காரணமாக 2004 ஆம் ஆண்டு சூடானிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அகதியாக தஞ்சம் புகுந்தவர்.
தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் ஜோசி அஜாக், குவின்ஸ்லாண்டில் உள்ள ஒரு காபி ஷாப்பில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் அங்கு காபி குடிக்க வந்த வெள்ளையின பெண்ணிடம் ஜோசி அவரின் தேவை குறித்து கேட்க, அவரோ வெள்ளையின பெண்ணை அனுப்பும்படி கேட்டுள்ளார்.
இது குறித்து அவுஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள ஜோசி, “அப்படி அந்த பெண் சொன்னதும் நான் அதிர்ந்து போனேன். இருப்பினும் நான் அவரிடமிருந்து கனிவுடன் விலகி மற்ற வாடிக்கையாளர்களை கவனிக்க தொடங்கிவிட்டேன்”.
இந்த செயலை அடுத்து அவ்வெள்ளையின பெண்ணிற்கு காப்பி ஷாப் சேவை அளிக்க மறுத்துவிட்டது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து நிறவெறியினை எதிர்க்கும் வகையில் Buy a coffee from josie ஜோசியிடம் காப்பி வாங்குங்கள் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் எழுந்து அவருகுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
அவுஸ்ரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளாக பார்க்கப்பட்டாலும் அவ்வப்போது இப்படியான சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒருபுறம் நிறவெறி சார்ந்த பிரச்னையாக இது இருந்தாலும், இன்னொரு புறம் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் அகதிகள் பிரச்னையோடும் இதை ஒப்பிட்டு பார்க்கலாம்.
அகதிகளுக்கு இடமளிப்பது உள்நாட்டு சூழலில் பிரச்னையை ஏற்படுத்தும் என்ற வாதத்திற்கும் சேர்த்தே ஜோசி கனிவான பதிலளித்திருக்கிறார் எனலாம்.