கராத்தே யூரோப்பியன் சம்பியன் 2016ம் ஆண்டுக்கான போட்டி இத்தாலி நாட்டில் 11/10/2016 தொடக்கம் 16/10/2016 வரை நடைபெற்றது. பத்து வயதுப் பிரிவில் காட்டா போட்டியில் ஈழத்து சிறுமி ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்திருக்கிறார்.
இலண்டனில் வசிக்கும் சிவகுமார் அகல்யா என்பவர் ஆவார். சிறுமியை எமது இணையம் தொடர்பு கொண்டபோது தனக்கு கற்பித்த ஆசான்களாலும், பெற்றோர்களாலும் தனது விடாமுயற்சியான பயிற்சியாலும் கிடைத்த வெற்றியாக கூறியுள்ளார். இவருக்கு எமது இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Eelamurasu Australia Online News Portal