அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டிற்கான நிரந்தர குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வரவேற்றுள்ளது.
குறித்த நிகழ்வுக்கான ஆன்லைன் பதிவானது இம்மாதம் 4ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
குறிப்பிட்ட நிகழ்வில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களை நிரந்தர குடியுரிமைக்கான நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.
இந்த ஆண்டு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களை அடுத்த ஆண்டு குறித்த நாளில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தெரிவாகும் விண்ணப்பத்தாரர்களுக்கு 2018ஆம் ஆண்டு முதல் நிரந்த குடியுரிமை வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
குறித்த நிகழ்வானது அக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவு மக்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
விண்ணப்பத்தாரர்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரே பெயரில் பல முறை விண்ணப்பிப்பது நிராகரிக்கப்பட வாய்ப்பு உண்டு.
நிரந்தர குடியுரிமை பெற தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் அடுத்த ஆண்டு மே மாத துவக்கத்தில் தங்களின் விண்ணப்பம் குறித்து இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளவும்.
அதில் தெரிவாகி இருப்பவர்கள் மேலதிக ஆவணங்களை குறித்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தெரிவாகியிருக்கும் நபர்களுக்கு அதன் பின்னர் நேர்முக தேர்வுக்கான தகவல்கள் தெரிவிக்கப்படும்.
இது குறித்த மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு lk.usembassy.gov அல்லது Electronic Diversity Visa Lottery என்ற இணைப்பிற்கு செல்லவும்