செய்திமுரசு

தமிழ்க் கண்ணனின் சாதனை

சிங்கப்பூர் ஆயுதப் படை வாரண்ட் அதிகாரி பள்ளியின் தளபதி ஒருவர் முதன்முறையாகத் தலைமை வாரண்ட் அதிகாரியாகப் பதவி உயர்வு கண்டுள்ளார். 18 வயதில் இரண்டு ‘O’ நிலைத் தேர்ச்சிகளுடன் இராணுவத்தில் சேர்ந்த அவர், சிறு வயதில் தமது தந்தைக்குத் துப்புரவுப் பணியில் உதவி வந்தார். நல்ல செயல்திறனுடன் கூடிய கடின உழைப்பின் காரணமாக 12 ஆண்டுகளில் வாரண்ட் அதிகாரியாக பதவி உயர்ந்தார் தமிழ்க் கண்ணன்.

Read More »

சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தி நேற்றையதினம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை… இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெய்வ சங்கற்பம் போன்று தோன்றுகின்றது. தமிழ் மக்கள் பேரவை உதயமாகியதே அவ்வாறான ஒரு இறை சங்கற்பமாகவே நான் கருதுகின்றேன். “அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்” என்றிருந்த சூழலை மாற்றி “இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் ...

Read More »

மலேசிய விமானத்தின் தேடல் பணிகள் நீடிப்பதற்கு எண்ணம் இல்லை -அவுஸ்ரேலிய அதிகாரிகள்

காணாமல் போன MH370 மலேசிய விமானம் தற்போது தேடப்பட்டு வரும் பிராந்தியத்தில் இல்லை எனவும், தென் இந்து சமுந்திரத்தின் வடக்கு பகுதியில் தேடப்படுவதற்கு ஆய்வாளார்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேடல் நடவடிக்கையின் அடிப்படையில் தென் இந்து சமுத்திர பிராந்தியத்தில் காணாமல் போன விமானத்தின் பகுதிகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பீஜிங்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கி 239 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது எம்..எச்.370 விமானம் காணாமல் போனது. இந்த நிலையில். விரைவில் தேடுதல் நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வீடுகளை கொள்வனவு செய்த அமைச்சின் செயலாளர்

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை நிர்மாணித்த சீன நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தரகு பணம் மூலம் மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் 4 வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கொழும்பு கிருளப்பனையிலும் அவர் ஒரு வீட்டை கொள்வனவு செய்துள்ளார் எனவும் நாமல் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். மருதானையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்துள்ள இப்படியான கொடுக்கல் வாங்கல்களுக்கு அமைச்சரவையின் அனுமதிக் கிடைத்துள்ளதால், விசாரணைகளை முன்னோக்கி ...

Read More »

பொருத்து வீடு வேண்டாம்! கிளிநொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் பொதுமக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘வேண்டாம் வேண்டாம் பொருத்து வீடு வேண்டாம்’, ‘விளையாடாதே விளையாடாதே வீட்டுத்திட்டத்தில் விளையாடாதே’, ‘குசினியில்லா வீடெதற்கு’, போன்ற பதாகைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

அவுஸ்ரேலிய அணி 39 ஓட்டங்களால் வெற்றி !

அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 39 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 429 ஓட்டங்களை பெற்றுதுடன், பாகிஸ்தான் அணி 142 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 202 ஓட்டங்களுக்குள் ஆட்டத்தை இடைநிறுத்தி, பாகிஸ்தான் அணிக்கு 490 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 450 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. பாகிஸ்தான் ...

Read More »

அவுஸ்ரேலியா குடியரசாக மாற வேண்டும்!

இரண்டாம் எலிசபத் அரசியாரின் மறைவுக்குப் பிறகு அவுஸ்ரேலியா குடியரசாக மாறவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த அரசகுடும்பத்தினருக்குப் பதிலாக அவுஸ்ரேலிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அதிபர் நாட்டின் தலைவராக இருக்கவேண்டும் என்று திரு டர்ன்புல் கூறினார். நாட்டுப்பற்றால் அத்தகைய கருத்தைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். அவுஸ்ரேலியாவில் எலிசபத் அரசியாரின் ஆட்சி, இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அவுஸ்ரேலியா மக்களில் பெரும்பாலோருக்கிடையில் அரசியார் பிரபலமாக இருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. டர்ன்புல்லின் கருத்திற்கு, அவரது கட்சியிலே இருக்கும் ...

Read More »

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகியாக மாணவி தேர்வு

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகியாக புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர். அதில் புவேர்ட்டோ ரிக்கோ ...

Read More »

சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி!

சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் பெப்ரவரி மாதத்துடன், சிறிலங்கா கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்த்தன சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். இதன் பின்னர், அவர் உயர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைய கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ...

Read More »

ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் – 2016

இலங்கையின் வடகிழக்கில் உள்நாட்டில் குடிபெயர்ந்தோர், மீளக்குடியமர்த்தப்பட்டோர் ஆகிய பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவில் மீட்டுவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் பிரதி ஆண்டுகள் தோறும்  கிறிஸ்மஸ் நன்னாளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒஸ்ரேலியா அடையாளப்படுத்துகிறது. அதன் வகையில் இவ்வாண்டு (2016)  நத்தார் தினத்தை முன்னிட்டு அதன் நிதிசேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றது. அதன் செயற்பாடுகள் தொர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: tro-aust-christmas-appeal-letter_2016 tro-aust-radio-thon-media-announcement-2016 tro-xmas_radiothon_pledge-form_2016 tro-aust-christmas-appeal-letter_2016

Read More »