அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 39 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 429 ஓட்டங்களை பெற்றுதுடன், பாகிஸ்தான் அணி 142 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 202 ஓட்டங்களுக்குள் ஆட்டத்தை இடைநிறுத்தி, பாகிஸ்தான் அணிக்கு 490 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 450 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அஷாட் சபீக் 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், அவர் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
Eelamurasu Australia Online News Portal
