சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி!

சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் பெப்ரவரி மாதத்துடன், சிறிலங்கா கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்த்தன சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். இதன் பின்னர், அவர் உயர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், தற்போதைய கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும், சிறிலங்கா அரசாங்கம் அவரைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களை விடுவிக்க எடுத்த நடவடிக்கைக்காக, சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டுத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

navy-commander

ravindra-ranil-1