மலேசிய விமானத்தின் தேடல் பணிகள் நீடிப்பதற்கு எண்ணம் இல்லை -அவுஸ்ரேலிய அதிகாரிகள்

காணாமல் போன MH370 மலேசிய விமானம் தற்போது தேடப்பட்டு வரும் பிராந்தியத்தில் இல்லை எனவும், தென் இந்து சமுந்திரத்தின் வடக்கு பகுதியில் தேடப்படுவதற்கு ஆய்வாளார்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேடல் நடவடிக்கையின் அடிப்படையில் தென் இந்து சமுத்திர பிராந்தியத்தில் காணாமல் போன விமானத்தின் பகுதிகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பீஜிங்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கி 239 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது எம்..எச்.370 விமானம் காணாமல் போனது.

இந்த நிலையில். விரைவில் தேடுதல் நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் எனவும் மேலும் நீடிப்பதற்கு எண்ணம் இல்லை எனவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 2017 ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் தேடல் பணிகள் நிறைவடையும் நிலையிலும் விமானம் வீழ்ந்த இடத்தை குறிப்பிட்டு உறுதியான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முடியாது என அவுஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் டரன் செஸ்டர் தெரிவித்துள்ளார்.

குறித்த தேடல் பணிக்கு அவுஸ்ரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் நிதி வழங்கியிருந்தன.

எனினும், “நம்பத்தகுந்த ஆதாரம் கிடைக்கும் வரை தேடல் இடைநீக்கம் வேண்டும்” என தாம் கோரியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.