அவுஸ்ரேலியா குடியரசாக மாற வேண்டும்!

இரண்டாம் எலிசபத் அரசியாரின் மறைவுக்குப் பிறகு அவுஸ்ரேலியா குடியரசாக மாறவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனைச் சேர்ந்த அரசகுடும்பத்தினருக்குப் பதிலாக அவுஸ்ரேலிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அதிபர் நாட்டின் தலைவராக இருக்கவேண்டும் என்று திரு டர்ன்புல் கூறினார். நாட்டுப்பற்றால் அத்தகைய கருத்தைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

அவுஸ்ரேலியாவில் எலிசபத் அரசியாரின் ஆட்சி, இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அவுஸ்ரேலியா மக்களில் பெரும்பாலோருக்கிடையில் அரசியார் பிரபலமாக இருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

டர்ன்புல்லின் கருத்திற்கு, அவரது கட்சியிலே இருக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவுஸ்ரேலியாவை குடியரசாக மாற்றும் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.