நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை நிர்மாணித்த சீன நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தரகு பணம் மூலம் மின்வலு எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் 4 வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு கிருளப்பனையிலும் அவர் ஒரு வீட்டை கொள்வனவு செய்துள்ளார் எனவும் நாமல் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.
மருதானையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்துள்ள இப்படியான கொடுக்கல் வாங்கல்களுக்கு அமைச்சரவையின் அனுமதிக் கிடைத்துள்ளதால், விசாரணைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு மனவருத்தம் ஏற்படும் என்றும் மற்றுமொரு பகுதியினர் பிரதமருக்கு மனவருத்தம் ஏற்படும் எனவும் கூறி இப்படியான விசாரணைகளுக்கு உதவி வழங்காமல் இருந்து வருகின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.