‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகியாக மாணவி தேர்வு

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகியாக புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர்.

1191f008-4abe-4b59-85ab-d53d943692c5_l_styvpfஅதில் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது இளம்பெண் உலக அழகி பட்டம் வென்றார். கல்லூரி மாணவி ஆன இவர் ஸ்பெயின், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

 

 

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு 2015-ம் ஆண்டு பட்டம் வென்ற ஸ்பெயின் அழகி மிரேயா லலாகுனா கிரீடம் சூட்டினார்.

இப்போட்டியில் 2-வது இடங்களை டொமினிகள் குடியரசு நாட்டைசேர்ந்த யரீட்ஷா மிகுலெனினா ரெயஸ் ரமிரெஷ் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த நடாஷா மனுலாவும் தேர்வாகினர். கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த அழகிகள் 4-வது மற்றும் 5-வது இடங்களை பெற்றனர்.
உலக அழகிபோட்டியில் கனடாவை சேர்ந்த அனடா சியாலின் என்பவரும் பங்கேற்றார்.

6d67ce17-a432-4bf8-8400-a4498ddc0978_l_styvpfஇவர் சீனவாழ் கனடாவை சேர்ந்தவர். போட்டியில் பங்கேற்ற இவர் சீனாவில் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக பேட்டி அளித்தார். அதை தொடர்ந்து அவர் போட்டியாளர்களால் எச்சரிக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றும் நிலையில் இருந்தார். பின்னர் அவர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு சீனாவின் சான்யோ நகரில் நடந்த உலக அழகி போட்டியில் இவர் கலந்து கொண்டார். அப்போதும் இதே காரணத்துக்காக இவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.