செய்திமுரசு

நியூசிலாந்து சுற்றுப்பயணம்: அவுஸ்ரேலிய கப்டன் சுமித் விலகல்

அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்திகதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன்: ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவாரா?

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது அரை இறுதி போட்டியில் ரபேல் நடால் – டிமிட்ரோவ் மோதுகிறார்கள். கிராண்ட்சிலாம் போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சக நாட்டை சேர்ந்த வாவ்ரிங்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் 2-வது அரை இறுதியில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்- 15-ம் நிலை வீரர் டிமிட்ரோவ் (பெல்ஜியம்) மோதுகிறார்கள். 2009-ம் ஆண்டு சாம்பியனான ...

Read More »

வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் மயக்கம்

வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் மயக்கமுற்று விழுந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 14பேர் இன்றுடன் நான்காவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த வைத்தியர் குழு இவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தாயார் ஒருவர் நேற்று மாலை மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஏனையோர் நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை ...

Read More »

அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

அவுஸ்ரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. அவுஸ்ரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்ட அவுஸ்ரேலியா அணி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சிக்கும். அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப தீவிரம் காட்டும். கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கும் சொதப்பலாகவே இருந்தது. அதனை சரி ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் சானியா ஜோடி வெற்றி

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையரில் சானியா ஜோடி அரை இறுதியை எட்டியது. ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய  ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, இந்தியாவின் ரோகன் போபண்ணா- கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணையுடன் மல்லுகட்டியது. இதில் இரு ஜோடிகளும் தலா ஒரு செட்டை வசப்படுத்திய நிலையில், ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபனில் வீனஸ் வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியா வின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை கோகோ வேன்டேவேக் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (3-7) 6-2 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று ...

Read More »

பூஸா கைதிகள் உண்ணாவிரதம்!

பூஸா முகாமில் இரண்டாயிரம் பேரை தடுத்து வைத்திருக்கும் பிரிவில் இரண்டு பேரை மாத்திரம் தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும் தம்மை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியும் 2 தமிழ் அரசியல் கைதிகள் இன்றில் (25) இருந்து உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பத்துள்ளனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தங்கராசா விமலன் மற்றும் கனகரத்தினம் ஆதித்தன் ஆகிய இருவரும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் அவர்களின் வழக்கு இடம்பெற்று வந்தது. பின்னர் 2012 ஆம் ஆண்டு மேலதிக விசாரணைக்கான பூஸா முகாமுக்கு ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஜோகன்னா கோன்டாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், அவுஸ்ரேலிய  ஓபன் பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இன்று நடந்த கால்இறுதியில் 9-ம் நிலை வீராங்கனை ஜோகன்னா கோன்டாவை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் ...

Read More »

அண்டார்டிகாவை தனியே சுற்றி வந்து அவுஸ்ரேலிய பெண்

அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து அவுஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் லிசா பிலேயர், கப்பலில் மாலுமியாக பனியாற்றும் இவர் தனியாக சாகசப் பயணங்கள் மேற்கொள்வதில் பிரியமுடையவர். இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்திற்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த இவர், தனது பயணத்திற்கென பிரத்யேக படகு ஒன்றை உருவாக்கினார். ஆர்ப்பரிக்கும் அலைகளை உடைய பெருங்கடலில் கடும் மன உறுதியுடன் செயல்பட்டு 1,600 கடல் மைல் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கார் விபத்து! இந்தியப்பெண் கவலைக்கிடம்

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஏற்பட்ட கார் விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச் சென்று பாதசாரிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் பெண் நேத்ரா கிருஷ்ணமூர்த்தி (வயது 30) உள்பட ...

Read More »