அவுஸ்ரேலிய ஓபனில் வீனஸ் வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்ரேலியா வின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை கோகோ வேன்டேவேக் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (3-7) 6-2 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் வீனசின் சகோதரியான செரீனா வில்லியம்ஸ், குரோஷியாவின் மிர்ஜானா லூசிக் பரோனி இருவரும் விளையாடி வருகின்றனர். இதில் முதல் செட்டை வீனஸ் கைப்பற்றி வெற்றியை நோக்கி முன்னேறுகிறார். இப்போட்டியில் வீனஸ் வெற்றி பெறும் பட்சத்தில், சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் சகோதரிகள் இருவரும் மோதுவார்கள்.