அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது அரை இறுதி போட்டியில் ரபேல் நடால் – டிமிட்ரோவ் மோதுகிறார்கள்.
கிராண்ட்சிலாம் போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சக நாட்டை சேர்ந்த வாவ்ரிங்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடக்கும் 2-வது அரை இறுதியில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்- 15-ம் நிலை வீரர் டிமிட்ரோவ் (பெல்ஜியம்) மோதுகிறார்கள்.
2009-ம் ஆண்டு சாம்பியனான ரபேல் நடால் 4-வது முறையாக அவுஸ்ரேலிய ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்தில் இருந்து மீண்டு வந்த நடால் தடுமாறி வந்தார். தற்போது அவுஸ்ரேலிய ஓபன் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதுவரை அவர் 14 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal