அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து அவுஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார்
அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் லிசா பிலேயர், கப்பலில் மாலுமியாக பனியாற்றும் இவர் தனியாக சாகசப் பயணங்கள் மேற்கொள்வதில் பிரியமுடையவர்.
இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்திற்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த இவர், தனது பயணத்திற்கென பிரத்யேக படகு ஒன்றை உருவாக்கினார். ஆர்ப்பரிக்கும் அலைகளை உடைய பெருங்கடலில் கடும் மன உறுதியுடன் செயல்பட்டு 1,600 கடல் மைல் தூரத்தை 100 நாட்களில் பயணம் செய்து அண்டார்டிகா கண்டத்தை எட்டியுள்ளார்.
யாருடைய உதவியும் இன்றி இந்த சவாலான பயணத்தை மேற்கொண்ட லிசா பிலேயர், உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். இதற்கு முன்னதாக 102 நாட்களில் ஒருவர் பயணம் செய்த்தது சாதனையாக இருந்து வந்தது.
நன்கு பயிற்சி எடுத்ததாலும், மன உறுதியுடன் செயல்பட்டதாலும் இந்த சாதனையை செய்ய முடிந்ததாக லிசா பிலேயர் தெரிவித்துள்ளார்.