நியூசிலாந்து சுற்றுப்பயணம்: அவுஸ்ரேலிய கப்டன் சுமித் விலகல்

அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்திகதி ஆக்லாந்தில் நடக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.