அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

அவுஸ்ரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

அவுஸ்ரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்ட அவுஸ்ரேலியா அணி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சிக்கும். அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப தீவிரம் காட்டும்.

கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கும் சொதப்பலாகவே இருந்தது. அதனை சரி செய்தால் தான் அந்த அணியால் அவுஸ்ரேலியாவுக்கு சவால் அளிக்க முடியும். அடிலெய்டு மைதானம் அவுஸ்ரேலிய அணிக்கு ராசியானது கிடையாது. கடந்த 6 ஆண்டுகளில் இங்கு 7 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் அவுஸ்ரேலிய அணி 3 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.