Home / செய்திமுரசு (page 720)

செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் ஆன்மீகப் பணியாற்றி வரும் அருட்தந்தை பங்கிரஸ் ஜேடன் ஐ.நாவில் கருத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றையும் கொண்டுவரவுள்ளது. எனினும், இலங்கைக்கு ...

Read More »

பெங்களூர் மைதானம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெங்களூர் மைதானம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்தப்போட்டி நடந்த புனே ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்பட்டது. இதனால் 2-வது டெஸ்ட் நடைபெறும் பெங்களூர் ‘பிட்ச்‘ எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. முதல் 3 நாளில் ...

Read More »

அவுஸ்ரேலியா சுழற்பந்தில் ஜொலிக்க காரணம் ஒரு தமிழர்!

மலேசியாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட்டில் அந்த நாடு பிரபலமும் இல்லை. ஆனால், அந்த நாட்டில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த வீரர் ஒருவர் பிறந்து வளர்ந்திருக்கிறார். புனேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைத் தழுவியது. அவுஸ்ரேலிய ஸ்பின்னர் ஸ்டீவ் ஓ கீஃப் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர், விட்டுக் கொடுத்தது ...

Read More »

ஐ.நாவில் சிறிலங்காவை உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்ட அமெரிக்கா!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பிரதிநிதி சிறிலங்காவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டுக்கான முன்உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே நேற்று உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில், சிறிலங்கா குறித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் ...

Read More »

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பப் பயிற்சி அளித்தவர் அவுஸ்ரேலியாவில் கைது

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்த நபரை அவுஸ்ரேலிய  காவல் துறை நேற்று (28)  கைது செய்தனர். சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அவுஸ்ரேலியா காவல்துறையினர்   நேற்று கைது செய்தனர். 42 வயதான அந்த ...

Read More »

ஈழத்துப்பாடகர் சாந்தன் வணக்க நிகழ்வுகள் – சிட்னி, மெல்பேர்ண்

தாயகவிடுதலைக்கான போராட்டத்தில் தனது குரலால் விடுதலை எழுச்சியை மக்களிடத்தில் காவிச்சென்று விடுதலைப் பணியாற்றிய சாந்தன் அவர்களின் இழப்பு துயரமானது. பல நூற்றுக்கணக்கான விடுதலை எழுச்சிப் பாடல்களை பாடியும் தனது இரு புதல்வர்களை மாவீரர்களாக மண்ணின் விடுதலைக்கு அர்ப்பணித்தும் உறுதியாக போரின் இறுதிவரை ஓய்வில்லாமல் விடுதலைக்காக உழைத்திருந்தார். போர் முடிவடைந்த கடந்த எட்டு ஆண்டுகளில் பல போராளிகளை பல செயற்பாட்டாளர்களை நோய் என்ற காரணத்தோடு மரணித்துப்போய்க்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பாரிய போர் ...

Read More »

அக்கினியில் சங்கமமானது புரட்சி பாடகரின் குரல்!

ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் ஈழத்தின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் பூதஉடல் இன்று மாலை இரணைமடுவில் அக்கினியுடன் சங்கமமானது. மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகன் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கத்தின் இறுதி நிகழ்வு இன்று(28) செவ்வாய்க்கிழமை அவரது கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் பொது அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. இதனையடுத்து பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு ...

Read More »

எல்நினோ தாக்கம் பற்றி அவுஸ்ரேலியாவின் அதிர்ச்சி தகவல்!

காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் எல் நினோவின் தாக்கமானது, இவ்வருடம் 50 சதவீதத்தால் அதிகரிக்குமென, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. எல்நினோ எனப்படும் காலநிலை தாக்கத்தால்,  மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருக்குமெனவும், அதனால் அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு சாதகமாக அமையுமென அவுஸ்ரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த ...

Read More »

மூடப்பட்ட எல்லைக் கதவுகள்: அகதிகளுக்கு இடமில்லை! -அவுஸ்ரேலியா

எல்லைக் கதவுகள் மூடப்பட்டே உள்ளதால், அகதிகளுக்கு இடமில்லை என்று அவுஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஓபாமா ஆட்சியில் அவுஸ்ரேலியா -அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவுஸ்ரேலியா – அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் மீள்குடியமர்த்தும் ஒப்பந்தம் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், அகதிகள் தொடர்பான கொள்கையை மீண்டும் அவுஸ்ரேலியா வெளிப்படுத்தியுள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் கணவனை கொன்ற பெண்! நன்னடத்தையால் விடுதலை

கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இலங்கைப் பெண்ணின், நன்னடத்தை காரணமாகவே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை மருத்துவப் பெண், தனது கணவனை கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து ...

Read More »