அவுஸ்ரேலியாவில் ஆன்மீகப் பணியாற்றி வரும் அருட்தந்தை பங்கிரஸ் ஜேடன் ஐ.நாவில் கருத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றையும் கொண்டுவரவுள்ளது.

எனினும், இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதற்கு பல்வேறு தரப்பிர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற பேரழிவுகள் தொடர்பில் கிறிஸ்தவ திருச்சபையின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும். குறிப்பாக மனித உரிமைகள் விவகாரங்களில் எவ்வாறு பங்களிப்பு இருக்க வேண்டும்.

2009ஆம் ஆண்டு வவுனியா கம்பி வேலி முகாமுக்குள் நடந்த பலாத்காரம் சம்பவம் குறித்து அவுஸ்ரேலியாவில் ஆன்மீகப் பணியாற்றி வரும் மன்னார் மறைமாவட்டத்தின் அருட்தந்தை பங்கிரஸ் ஜேடன் கருத்து வெளியிட்டுள்ளார்.