Home / செய்திமுரசு (page 710)

செய்திமுரசு

கால இழுத்தடிப்பு வேண்டாம் – யாழ்.ஆயர்!

உண்மையை மூடி மறைக்கும் நோக்கிலோ அல்லது அரசியல் லாபம் கருதியோ காலத்தை இன்னும் இழுத்தடிக்காமல் விரைவாக செயற்படுங்கள் என இலங்கை அரசிடம் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். தழிழ் புத்தாண்டு ஈஸ்ரர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியினில் மேலும் தெரிவிக்கையினில் 2017ஆம் ஆண்டிற்குரிய தமிழ்  சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அன்பர்கள் அனைவர்க்கும்; இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை முதலில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி ...

Read More »

இந்தியாவுடன் வர்த்தக உறவு இப்போதைக்கு சாத்தியமில்லை-அவுஸ்ரேலிய பிரதமர்

இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தற்போது வாய்ப்புகள் குறைவு என்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்த வார தொடக்கத்தில் இந்தியா வந்திருந்தார். இரு நாடுகளுன் வர்த்தக ரீதியான மேம்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பாக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அவர் அவுஸ்ரேலிய செய்தி ஒளிபரப்பு கழகத்திற்கு ...

Read More »

நவுறு – மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை

அவுஸ்திரேலியாவின் நிர்வாகத்தில் உள்ள நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று அவர்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த நல்லெண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டுடன் குறித்த முகாம்களை பராமறிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவுக்கு வருகிறது.இன்னும் புதிய நிறுவனத்துக்கான கேள்வி அறிவிப்பு விடுக்கப்படவில்லை. ...

Read More »

மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துடன் நாமும் உடன்படுகிறோம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவில் நடத்த வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துடன் தாமும் உடன்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்த கலந்துரையாடலொன்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) இரவு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், இதன்போது புதிய அரசமைப்பே உருவாக்கப்பட ...

Read More »

மோடியை பாராட்டிய அவுஸ்ரேலிய பிரதமர்

பிரதமர் மோடி வரிவிதிப்பில் சிறப்பான முறையில் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளதாக, அவுஸ்ரேலிய பிரதமர் பாராட்டு தெரிவித்தார். சீர்திருத்த நடவடிக்கைகள்: நான்கு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், மும்பையில் நடந்த தொழிலதிபர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும், மிகச்சிறப்பானதாக உள்ளன. குறிப்பாக வரிவிதிப்பு முறையில் மேற்கொண்ட சீர்திருத்தம் சிறப்பு வாய்ந்தது. தொழில்நுட்ப ...

Read More »

அகதிகள் முகாம் சென்று பார்த்தால்தான் புரியும்! -மலாலா யூசுஃப்ஸை

பாகிஸ்தானில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடர்ந்து தாக்கிவந்த தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடியவர், மலாலா யூசுஃப்ஸை. 2012-ம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் பள்ளிக்குச் செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு, ஒரு வருட கால சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்தவர். பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய இவரது சாதனையைப் பாராட்டி, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தனது 17-வது வயதில் இந்தப் பரிசை வென்றதன்மூலம், இளம் வயதில் நோபல் ...

Read More »

மோடியுடன் செல்பி எடுத்த அவுஸ்ரேலிய பிரதமர்!

மோடி, மால்கம் ஆகியோர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். அப்போது இருவரும் மாறி மாறி செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் கலகலப்பாக்கியது. அவுஸ்ரேலிய பிரதமர் உடனான சந்திப்பு குறித்து மோடி கூறியபோது, “சமீபகாலமாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவுகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. மால்கம் வருகையால் அது தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டு, புதிய மைல்கற்களை தொட்டுள்ளது” என்று கூறினார். அவுஸ்ரேலிய  பிரதமர் மால்கம் பேசுகையில், “இந்திய மாணவர்களுக்கு ...

Read More »

இந்தியா அவுஸ்ரேலியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா அவுஸ்ரேலியா இடையே கையெழுத்தாகின. அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று (10) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ...

Read More »

22 மேஜர் ஜெனரல்களின் கனவைப் பொசுக்கிய சிறீலங்கா இராணுவத் தளபதி!

சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மூன்றாவது தடவையும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கையை, சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் பதவிக் காலம் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகின்றது. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் நாள் 55வயதையடைந்த லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு முதலில் ஆறு மாதங்களும் ...

Read More »

69 மாடிகளைக் கொண்ட கிரிக்கெட் துடுப்பு வடிவிலான குடியிருப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களின் நலன்கருதி 69 மாடிகளைக் கொண்ட கிரிக்கெட் துடுப்பு வடிவிலான குடியிருப்பு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதனை அமைக்க 1996 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்கள் முன்வந்துள்ளனர். அந்தவகையில், ‘96 வெற்றி நாய­கர்கள் சதுக்கம்’ என்ற பெயரில் 69 மாடிகளை கொண்ட பாரிய குடியிருப்பு ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் கட்டடத்தின் மூலம் ...

Read More »