மோடி, மால்கம் ஆகியோர் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். அப்போது இருவரும் மாறி மாறி செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் கலகலப்பாக்கியது.
அவுஸ்ரேலிய பிரதமர் உடனான சந்திப்பு குறித்து மோடி கூறியபோது, “சமீபகாலமாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவுகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
மால்கம் வருகையால் அது தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டு, புதிய மைல்கற்களை தொட்டுள்ளது” என்று கூறினார்.
அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் பேசுகையில், “இந்திய மாணவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம்” என்று கூறினார்.
Eelamurasu Australia Online News Portal