பிரதமர் மோடி வரிவிதிப்பில் சிறப்பான முறையில் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளதாக, அவுஸ்ரேலிய பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
சீர்திருத்த நடவடிக்கைகள்:
நான்கு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், மும்பையில் நடந்த தொழிலதிபர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும், மிகச்சிறப்பானதாக உள்ளன. குறிப்பாக வரிவிதிப்பு முறையில் மேற்கொண்ட சீர்திருத்தம் சிறப்பு வாய்ந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சி:
மனித வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோர் சுமார் 40 கோடி பேர். இதனால் உலகின் அனைத்து பகுதியில் உள்ளவர்களையும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal