செய்திமுரசு

அவுஸ்ரேலியாவின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுத்துறை துணை அமைச்சர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்!

அவுஸ்ரேலியாவில் இருந்து வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுத்துறை துணை மந்திரி கெய்த் பிட் தலைமையிலான குழு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த குழு இன்று இந்திய உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் மற்றும் இந்திய அதிகாரிகள் கொண்ட குழுவினரை சந்தித்தது. இந்தியாவுக்கான அவுஸ்ரேலிய துணை தூதர் கிறிஸ் எல்ஸ்ராப்ட், உருக்குத்துறை செயலாளர் அருணா சர்மா மற்றும் இருநாடுகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின்போது, தேசிய உருக்கு கொள்கை-2017 மற்றும் மோடி தலைமையிலான இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் பிற முயற்சிகள் தொடர்பான விவரங்களை பிரேந்தர் ...

Read More »

புகலிடக் கோரிக்கையாளருக்கு அவுஸ்ரேலிய அரசின் அதிரடி அறிவிப்பு

அவுஸ்ரேலியப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலருக்கு கொடுப்பனவு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மனுஸ் மற்றும் நவ்ரு தடுப்பு முகாம்களிலிருந்து உடல் நலமின்மை காரணமாக அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்பட்டவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு உதவியுடன் அவர்கள் சமூகத்தில் வாழும் நடை முறை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் தயாரிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதேவேளை “final departure Bridging E Visa” என்று அரசு கூறும் விசா வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்று ...

Read More »

ஐரோப்பிய தலைவர்களின் சிலைகளின் மீது பெயின்ட்!

சிட்னியிலுள்ள பல ஐரோப்பிய தலைவர்களின் சிலைகளின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் பெயின்ட் தெளித்துச் சென்றுள்ளனர். அவுஸ்திரேலியா எனும் கண்டத்தில் ஐரோப்பியர்கள் குடியேற காலடிபதித்த நாளான ஜனவரி 26 எனும் நாளை அவுஸ்திரேலிய தினமாக கொண்டாடக் கூடாது என்று பல குரல்கள் ஆர்ப்பரித்து வருகின்றன. இதன் பின்னணியில் இந்த சிலைகளின்மீது பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்தவர் “discovered” the territory in 1770” என்று ஜேம்ஸ் குக் அவர்களின் சிலையின் மீது எழுதப்பட்டிருக்கும் வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 வயது சிறுமி உயிரிழப்பு!

சிட்னி Lalor Park பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். அனுமதியில்லாமல் துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக, குறித்த சிறுமியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (27) இரவு அவசர சேவைப்பிரிவினர் சிறுமியின் வீட்டுக்கு அழைக்கப்பட்டபோது, கழுத்தில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்திருந்தார். குறித்த சிறுமி துப்பாக்கியை எடுத்து தன்னைத்தான் சுட்டுக்கொண்டாரா அல்லது தந்தையால் சுடப்பட்டாரா என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் ...

Read More »

வாள்வெட்டுகள் குறித்து ஆராய்ந்த இராணுவ அதிகாரிகள்!

யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நேற்று(26) வடமராட்சியில் நடைபெற்றுள்ளது. துன்னாலையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்பட்டதாக என்று கூறப்படுகின்றது.

Read More »

அவுஸ்ரேலியா: போதைப்பொருள் வழக்கில் பிரபல சைக்கிள் பந்தய வீரர் கைது

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த இருமுறை ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற சைக்கிள் பந்தய வீரரான ஜேக் பாப்ரிட்ஜ் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர், ஜேக் பாப்ரிட்ஜ். இவர், கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் அவுஸ்ரேலியாவிற்காக சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கங்கள் வென்றுள்ளார். அவருக்கு ஏற்பட்ட முடக்குவாத பிரச்சனையால் சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு விலகினார். இந்நிலையில், அவர் வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்திய காவல் துறை , அங்கிருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரை காவல் துறையினர் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா வங்காளதேசம்?

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திப்பது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். வங்காளதேச ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் அவுஸ்ரேலியஅணி நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ...

Read More »

தலைவர் பிரபாகரன் இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தார்!

தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்தெசரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்குவழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடைய தயாராக இருப்பதாக நோர்வேக்கான முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என கோத்தா குறிப்பிட்டார். எனினும் பிரபாகன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை. ...

Read More »

அவுஸ்ரேலியாவில் துடுப்பாட்ட மட்டையால் சக மாணவர்களைத் தாக்கிய மாணவன்!

கான்பராவிலுள்ள உள்ள அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (Australian National University) வகுப்பறையில் ஒரு துடுப்பாட்ட மட்டை (baseball bat) கொண்டு பல மாணவர்களைத் தாக்கிய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வகுப்பறையில் துடுப்பாட்ட மட்டையுடன் இன்று காலை நுழைந்த அந்த மாணவரை மற்றைய மாணவர்கள் தடுத்து நிறுத்துவதற்கு முன்பாக நான்கு மாணவர்களை அவர் தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், சிலர் தீவிரமாக காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை யாருடைய உயிருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லையென கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதல்தாரி 18 வயதான வெள்ளை இனத்தவரென்றும், ...

Read More »

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: அவுஸ்ரேலிய லெவன் அணி அறிவிப்பு

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் நாளை தொடங்கும் நிலையில், ஆடும் லெவன் அணியை அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. வங்காள தேசம் –  அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. பெரும்பாலும் போட்டி நடைபெறுவதற்கு சற்று முன்புதான் ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பெயரை அணி வெளியிடும். ஆனால் நாளை டாக்காவில் தொடங்கும் முதல் போட்டிக்கான  அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அந்த அணி இன்றே வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ...

Read More »