அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த இருமுறை ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற சைக்கிள் பந்தய வீரரான ஜேக் பாப்ரிட்ஜ் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர், ஜேக் பாப்ரிட்ஜ். இவர், கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் அவுஸ்ரேலியாவிற்காக சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கங்கள் வென்றுள்ளார். அவருக்கு ஏற்பட்ட முடக்குவாத பிரச்சனையால் சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு விலகினார்.

இந்நிலையில், அவர் வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்திய காவல் துறை , அங்கிருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், பெர்த் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் அவர் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal