தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்தெசரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்குவழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடைய தயாராக இருப்பதாக நோர்வேக்கான முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என கோத்தா குறிப்பிட்டார்.
எனினும் பிரபாகன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை. யுத்தம் நிறைவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தொலைபேசி அழைப்பை நாம் கேட்டோம்.
இதன்போது கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை செவிமடுத்தோம்.
அதில் யுத்தத்தை கைவிட்டு விடுங்கள், வெளிநாட்டுக்கு ஓடி விடுங்கள், பிறகு ஒரு நேரம் வந்து நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரபாகரன், என்னால் நிலைமைகளை மாற்ற முடியும், ஆயுதங்கள் சற்று தேவை, என கூறினார்.
இந்த உரையாடலில் இருந்து நாம் விளங்கிக் கொண்டது பிரபாகரனுக்கு ஒருபோதும் சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதாகும் எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal